சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன.
பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.967ஆக அதிகரித்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள்
சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன.

சிலிண்டர் விலை உயர்வு
இந்நிலையில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.967ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களான ரூ.917ஆக நீடித்து வந்த நிலையில் வீட்டு உபயோக சிலிண்டல் விலை ரூ.967ஆக உயர்ந்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை 1000 ரூபாய் நோக்கி உயர்ந்து வருவது இல்லத்தரவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு
137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ 102.16 க்கு விற்பனையாகிறது. அதேபோல், சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ 92.19க்கு விற்பனை செய்யப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 117 டாலர் ஏற்றத்தால் இந்த விலை உயர்வு ஏற்பட்டதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.