ரெனால்ட் நிறுவனத்தின் லிமிடெட் எடிஷன் டிரைபர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ரெனால்ட் நிறுவனம் தனது டிரைபர் எம்.பி.வி. மாடலின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்திய சந்தை விற்பனையில் ஒரெனால்ட் எம்.பி.வி. .மாடல் ஒரு லட்சம் யூனிட்களை எட்டியதை கொண்டாடும் வகையில் புதிய லிமிடெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டதாக ரெனால்ட் அறிவித்து இருக்கிறது.
புதிய லிமிடெட் எடிஷன் டிரைபர் மாடல் நாடு முழுக்க அனைத்து ரெனால்ட் விற்பனை மையங்களிலும் முன்பதிவு செய்யப்படுகிறது. புதிய ரெனால்ட் டிரைபர் லிமிடெட் எடிஷன் மாடல் விலை ரூ. 7.24 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டிரைபர் லிமிடெட் எடிஷன் மாடல் RxT மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை ஸ்டாண்டர்டு RxT மாடலை விட ரூ. 28 ஆயிரம் அதிகம் ஆகும்.
லிமிடெட் எடிஷன் மாடலில் டூயல் டோன் பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டிரைபர் மாடல் தற்போது மூன்லைட் சில்வர் மற்றும் பிளாக் ரூஃப் மற்றும் செடார் பிரவுன் மற்றும் பிளாக் ரூஃப் கொண்ட வேரிண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் 14 இன்ச் ஃபிளெக்ஸ் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. உள்புறம் புதிய பியானோ பிளாக் நிற டேஷ்போர்டு, அகாஸா ஃபேப்ரிக், பிளாக் நிற டோர் ஹேண்டில்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ORVM-கள் ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ மற்றும் போன் கண்ட்ரோல்கள், மூன்று அடுக்கு இருக்கைகளிலும் ஏ.சி. வெண்ட்கள், புஷ் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், கீலெஸ் எண்ட்ரி அண்ட் கோ, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 4 ஏர்பேக், ரிவர்ஸ் பார்கிங் கேமரா, கூல்டு செண்டர் கன்சோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த மாடலில் 1 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 71.01 பி.ஹெச்.பி. திறன் மற்றும் 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. லிமிடெட் எடிஷன் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேடெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
