எல்ஐசி காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் விற்பனை மார்ச் 31-ம் தேதிக்குள் தொடங்க இருக்கும் நிலையில், பாலிசிதாரர்களுக்கு தள்ளுபடியில் விலையில் பங்குகளை விற்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
எல்ஐசி காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் விற்பனை மார்ச் 31-ம் தேதிக்குள் தொடங்க இருக்கும் நிலையில், பாலிசிதாரர்களுக்கு தள்ளுபடியில் விலையில் பங்குகளை விற்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பங்குகள் விற்படுவதில் 10 சதவீதத்தை பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கவும், அவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடியில் பங்குகளை விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டிலேயே மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு ஐபிஓ மூலம் விற்பனை செய்ய இருக்கிறது. பங்குகள் விற்பனை குறித்த சரியான தேதி தெரியாவில்லை என்றாலும், மார்ச் 31-ம் தேதிக்கு முன்பாக பங்குகள் விற்பனை இருக்கும் எனத் தெரிகிறது.

ஐபிஓ விற்பனை மூலம் கிடைக்கும் நிதியை வைத்து, நாட்டின் நிதிப்பற்றாக்குறையை குறைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
எல்ஐசி ஐபிஓ விற்பனை நடக்கும் முன், எல்ஐசி வசம் இருக்கும் ஐடிபிஐ வங்கியின் பங்குகள் முழுவதும் விற்பனை செய்யப்பட்டபின்புதான் ஐபிஓ விற்பனை இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் பொருளாதார வல்லுநர்கள், ஊடகங்கள் தரப்பில் எல்ஐசி ஐபிஓ மதிப்பு 5300 கோடி டாலர் முதல் 15,000 கோடி டாலர்கள் வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைதுறையின் செயலாளர் துஹிந் கந்தா பாண்டே அளித்த பேட்டியில் கூறுகையில் “ எல்சிஐ காப்பீடு நிறுவனத்தின் பங்குகள் விற்பனை மார்ச் இறுதிக்குள் இருக்கும் என நம்புகிறேன். எல்ஐசி நிறுவனம் தங்களுடைய கோடிக்கணக்கான பாலிசிதாரர்களுக்கு தள்ளுபடி விலையில் பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது.

இந்த தள்ளுபடி, 5 சதவீதம் வரை இருக்கலாம் எனத் தெரிகிறது. இதேபோல எல்ஐசி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பங்குகள் விற்பனையில் தள்ளுபடி தரப்படும். விற்பனை செய்யப்பட உள்ள பங்குகளில் 10 சதவீதம் பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்படும்.
இது தவிர பாலிசிகளை வாங்கி விற்பனை செய்யும் சில்லரை விற்பனையாளர்களுக்கும் தள்ளுபடி தரப்படலாம். ஆனால், உறுதி செய்யப்படவில்லை, இது தொடர்பாக ஆலோசனை மட்டுமே நடக்கிறது. சாமானிய மக்களும் பங்குகளை வாங்குவதை ஊக்குப்படுத்தும் நோக்கில் தள்ளுபடி தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது” எனத் தெரிவித்தார்

ஆனால், பொருளாதார வல்லுநர்கள் கருத்துப்படி மத்திய அரசு தன்னிடம் இருக்கும் 5 முதல் 10 சதவீதப் பங்குகளை விற்பனை செய்து ரூ. 65 ஆயிரம் கோடி முதல் ரூ.75 ஆயிரம் கோடிவரை திரட்ட திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.பங்குகள் விற்பனை தொடர்பாக வரைவு திட்டத்தை(டிஆர்ஹெச்பி) எல்ஐசி வரும் 10ம் தேதி வெளியிடலாம் எனத் தெரிகிறது
