LIC IPO: எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனை மார்ச் 11ம் தேதி நடக்க இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அது அடுத்த நிதியாண்டுக்குத் தள்ளிப்போகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனை மார்ச் 11ம் தேதி நடக்க இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அது அடுத்த நிதியாண்டுக்குத் தள்ளிப்போகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போரால், பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள ஊசலாட்டமான போக்கு, முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையற்ற தன்மை ஆகியவற்றால், ஐபிஓ தள்ளிவைக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் இருக்கலாம் என்று தெரிகிறது. ஒருவேளை ஏப்ரல் மாதத்தில் கூட எல்ஐசி ஐபிஓ இருக்கலாம் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், பங்குச்சந்தையின் நிலவரத்தின் அடிப்படையில்தான் அந்த முடிவும் எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனங்கள் சார்பில் மத்திய நிதிஅமைச்சகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர். எல்ஐசி நிறுவனமும் பதில்அளிக்க மறுத்துவிட்டது.
உக்ரைன் ரஷ்யப் போரால் பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் ஏற்ற இறக்கத்தால் எல்ஐசிஐபிஓ தள்ளிப்போகுமா என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கடந்த சில நாட்களுக்கு முன் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “ எல்ஐசி ஐபிஓவுக்கு சாதகமான சூழல் இல்லாவிட்டால், மற்றொரு வாய்ப்பை பரிசீலிக்க அரசு தயங்காது. அடுத்த சில மாதங்களுக்குள் ஐபிஓ முடிந்துவிடும்” எனத் தெரிவித்திருந்தார்.
எல்ஐசி ஐபிஓ மூலம் ரூ.65ஆயிரம் கோடி நிதி திரட்டி, நிதப்பற்றாக்குறையைக் குறைக்க மத்திய அரசு எண்ணியது. ஆனால், நடப்பு நிதியாண்டுக்குள் பங்கு விற்பனை நடக்காது என்பதால் எதிர்பார்த்தநிதியையும் திரட்ட முடியாது.
மத்திய அரசு எல்ஐசியில் தனது 5% சதவீதப் பங்குகளை விற்று ரூ.65ஆயிரம் கோடி முதல் ரூ.75 ஆயிரம் கோடிவரை திரட்ட மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.

இதில் பாலிசி வைத்திருக்கும் மக்கள், எல்ஐசியில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு சிறப்புத் தள்ளுபடி தரப்பட உள்ளது. பாலிசிதாரர்கள் பங்குகளை வாங்க விரும்பினால், அவர்கள் பாலிசியுடன் பான் எண்ணை இணைத்திருக்க வேண்டும். இதற்கான கடைசித் தேதியும் முடிந்துவிட்டது. ஐபிஓவுக்கு அனைத்தும் தயாரான சூழலில், மிகவும்எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உக்ரைன் ரஷ்யப் போரால் பங்குச்சந்தையில் ஏற்பட்டுவரும் ஏற்ற இறக்கம்தான் எல்ஐசி ஐபிஓவை ஒத்திவைக்கும் முடிவை அரசை எடுக்க வைத்துள்ளது.
