LIC IPO: lic ipo subscription  :எல்ஐசி ஐபிஓ விற்பனைக்கு எதிர்பார்ப்பைவிட பாலிசிதாரர்கள், ஊழியர்கள், சில்லரை முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. 3-வது நாளான நேற்று 1.38 மடங்கு பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எல்ஐசி ஐபிஓ விற்பனைக்கு எதிர்பார்ப்பைவிட பாலிசிதாரர்கள், ஊழியர்கள், சில்லரை முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. 3-வது நாளான நேற்று 1.38 மடங்கு பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

3-வது நாள் இறுதியில் எல்ஐசி ஐபிஓவுக்கு ரூ.20ஆயிரத்து 269 கோடிக்கு முதலீடு குவிந்துள்ளது.பாலிசிதாரர்கள், எல்ஐசி ஊழியர்கள், சில்லரை முதலீட்டாலர்கள் தரப்பில் அமோகமான ஆதரவு இருக்கிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

எல்ஐசி பங்கு விற்பனை கடந்த 2-ம் தேதி ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு நடந்தது. அதன்பின் 4ம் தேதி முதல் வரும் 9ம் தேதிவரை பொது முதலீட்டாளர்களுக்கு பங்கு விற்பனை நடக்க இருக்கிறது. இதில் கடந்த 3 நாட்களில் எல்ஐசி பங்கு விற்பனை ரூ.20ஆயிரம் கோடிக்கு அதிகமாக நடந்துள்ளது

ஒட்டுமொத்தமாக 16.27 கோடி பங்குகளுக்கு 22.34 கோடி விண்ணப்பங்கள் அதாவது 1.38 மடங்கு விண்ணப்பம் வந்துள்ளது. முதலீட்டாளர்கள் தரப்பிலிருந்து 3-ம் நாளா நேற்றுவரை 47.20 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 

பொது முதலீட்டாளர்களுக்கான பங்கு விற்பனையில் எல்ஐசி ஊழியர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.45 தள்ளுபடியும், பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடியும் தரப்படுகிறது. எல்ஐசி பங்கு ஒன்றின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை விற்கப்படுகிறது.

கடந்த 2ம் தேதி ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு நடந்த பங்கு விற்பனையில் ரூ.5,267 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. இதில் 71 சதவீத முதலீடு உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் வந்துள்ளன. 123 முதலீட்டாளர்கள் 5.93 கோடி பங்குகளை வாங்கியுள்ளனர்.

ஒரு பங்கு ரூ.949க்கு விற்கப்பட்டுள்ளது. இதில் 4.21 கோடி பங்குகள் மட்டும் 15 உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு 99 திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன.எல்ஐசி பங்கு விற்பனை சனிக்கிழமையும்(இன்று) நடக்கிறது. இதுதவிர எல்ஐசி பங்குவாங்க விருப்ப மனுக்களை பெறுவதற்காக நாடுமுழுவதும் அனைத்து எஸ்பிஐ வங்கிகளின் கிளைகளும் நாளை திறக்கப்பட உள்ளது.

பாலிசிதாரர்கள் இதுவரை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளின் அளவைவிட 4 மடங்கு கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். எல்ஐசி ஊழியர்கள் 3.1 மடங்கு கூடுதலாகவும், சில்லரை முதலீட்டாளர்கள் 1.23 மடங்கும் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ80 கோடிக்கு இதுவரை விருப்பம் தெரிவித்துள்ளனர். இன்றும், நாளையும் ஐபிஓ விற்பனை நடந்து, திங்கள்கிழமையுடன் நிறைவடைகிறது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள ரூ.21 ஆயிரம் கோடியை பங்கு விற்பனை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.