உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால் எல்ஐசி பங்குகள் விற்பனைக்கான தேதி மாற்றி அமைக்கப்படும் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால் எல்ஐசி பங்குகள் விற்பனைக்கான தேதி மாற்றி அமைக்கப்படும் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 5 % பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய இருக்கிறது. இதற்கான வரைவு அறிக்கையை எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு அமைப்பான செபியிடம் தாக்கல் செய்துவிட்டது. வரும் மார்ச் 11ம்தேதி எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனை இருக்கலாம்.

இந்த 5% சதவீதப் பங்குகளை விற்று ரூ.65ஆயிரம் கோடி முதல் ரூ.75 ஆயிரம் கோடிவரை திரட்ட மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஓ மூலம் 31.60 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படஉள்ளன. 

இதில் பாலிசி வைத்திருக்கும் மக்கள், எல்ஐசியில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு சிறப்புத் தள்ளுபடி தரப்பட உள்ளது. பாலிசிதாரர்கள் பங்குகளை வாங்க விரும்பினால், அவர்கள் பாலிசியுடன் பான் எண்ணை இணைத்திருக்க வேண்டும். இதற்கான கடைசித் தேதியும் நேற்றுடன் முடிந்துவிட்டது.

இந்நிலையில் உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார். உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக இந்திய விமானப்படையை களமிறக்கி, மாணவர்களை மீட்க உள்ளது.

உள்நாட்டளவில் எந்தவிதமான பதற்றமும் இல்லாவிட்டாலும், சர்வதேச சூழல், காரணிகள் எல்ஐசி பங்குவிற்பனைக்கு சாதகமாக இல்லை. அன்னிடநேரடி முதலீட்டாளர்களும் ஆட்டோமேட்டிக் ரூட் மூலம் 20சதவீதம்வரை வாங்கலாம் என்று அனுமதிக்கப்பட்டநிலையில் சர்வதேச சூழலால் அவர்கள் பங்கு விற்பனையில் பங்கேற்பார்களா எனத் தெரியவில்லை. அவ்வாறு பங்கேற்றாலும் ஐபிஓ மத்திய அரசு எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இருக்குமா, எதிர்பார்த்த தொகை கிடைக்குமா என்ற கேள்விகள் எழுகின்ற

இந்நிலையில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் எல்ஐசி ஐபிஓ திட்டமிட்டப்படி இந்த மாதத்தில்நடக்குமா எனக் கேட்டனர். அதற்கு அவர், “ எல்ஐசி பங்குகள் விற்பனையை திட்டமிட்டப்பட நடத்தவே விரும்புகிறோம்.

இந்தியாவின்சூழலுக்கு ஏற்றப்படிதான் திட்டமிட்டுள்ளோம். ஆனால், சர்வதேச சூழலையும் நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு சர்வதேச சூழலையும் பரிசீலி்க்க வேண்டிய தேவையிருந்தால், ஐபிஓ தேதியை பரிசீலனை செய்ய தயங்கமாட்டோம்” எனத் தெரிவித்தார்

எல்ஐசி ஐபிஓ தாமதமானால், நிதிபற்றாக்குறை இலக்கை அடையமுடியாதே என்ற கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதில்அளிக்கையில் “ ஒரு நிறுவனம் ஐபிஓ வெளியிடும்போது, ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அதற்குரிய காரணத்தை நிறுவனத்தின் நிர்வாகக்குழுவில் மட்டும் விளக்கம் அளித்தால் போதும். ஆனால், எல்ஐசி விவகாரத்தில் நான் உலகம் முழுமைக்கும் விளக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்