LIC IPO: ரஷ்யா உக்ரைன் போரால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட ஊசலாட்டம் காரணமாக, ஒத்திவைக்கப்பட்ட எல்ஐசி ஐபிஓவில்  இறுத ஆவணங்களை மத்திய அரசு விரைவில் தாக்கல் செய்ய இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

ரஷ்யா உக்ரைன் போரால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட ஊசலாட்டம் காரணமாக, ஒத்திவைக்கப்பட்ட எல்ஐசி ஐபிஓவில் இறுத ஆவணங்களை மத்திய அரசு விரைவில் தாக்கல் செய்ய இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

இறுதி ஆவணம்

இந்த இறுதி ஆவணங்களில்தான் எல்ஐசி ஒரு பங்கின விலை, சில்லரை வர்த்தகர்கள், பாலிசிதாரர்கள், எல்ஐசிஊழியர்களுக்கு எத்தனை சதவீதம் , எவ்வளவு தள்ளுபடி, எத்தனை பங்குகளை விற்கத் திட்டமிட்டுள்ளது உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் அதிகாரபூர்வமாகத் தெரிவி்க்கப்படும்.

ஆனால், சர்வதேச சூழல் காரணமாக பங்குச்சந்தையில் கடும் ஏற்ற இறக்கம் நிலவுகிறது. ஒருநாள் வர்த்தகம் உற்சாகத்துடன் சென்று ஏற்றத்தில் முடிகிறது, மறுநாள் பாதாளத்தில் சென்று முதலீட்டாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. ஆதலால், பங்குச்சந்தையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. 

விரைவில் தாக்கல்

இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில் “ டிஆர்ஹெச்பி ஒப்புதல் கிடைத்துவிட்டது.அடுத்ததாக ஆர்ஹெச்பி தாக்கல் செய்ய இருக்கிறோம். அதில்தான் பங்கின் விலை, எத்தனை பங்குகள், சலுகைகள் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். பங்குச்சந்தை சூழல்களைக் கவனித்து வருகிறோம். சரியான தருணம் வந்தவுடன் பங்குவிற்பனை குறித்து அறிவிப்போம்” எனத் தெரிவித்தார்

ரூ.70 ஆயிரம் கோடி

எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் பங்குகளில் 5 சதவீதத்தை, அதாவது 31.60 கோடி பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய இருக்கிறது. இதில் 5 சதவீத பங்குகளை ஊழியர்களுக்கும், 10 சதவீதத்தை பாலிசிதாரர்களுக்கும் விற்பனை செய்ய எல்ஐசி திட்டமிட்டுள்ளது. 
வரைவு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, “எல்ஐசி நிறுவனம் 31 கோடியே, 62 லட்சத்து 49ஆயிரத்து 885 பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது. ஒவ்வொரு பங்கின் முகமதிப்பு ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி எல்ஐசி வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்த வாரத் தொடக்கத்தில் செபி வரைவு ஆவணங்களுக்கு அனுமதியும் அளித்தது. 

இந்த ஐபிஓ மூலம் மத்திய அரசு ரூ.65 ஆயிரம் முதல் ரூ.75ஆயிரம் கோடிவரை திரட்டி, நிதிப்பற்றாக்குறையைக் குறைகக் திட்டமிட்டுள்ளது.
எல்ஐசி ஐபிஓ மிகவும் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் கடந்த ஆண்டு பேடிஎம் ஐபிஓ மூலம் ரூ.18300 கோடி திரட்டப்ட்டது.

அடுத்தார்போல் கோல் இந்தியா ஐபிஓ மூலம் 2010ம் ஆண்டில் ரூ.15,500 கோடியும், ரிலையன்ஸ் பவர் ஐபிஓ மூலம் ரூ.11,700 கோடி 2008ம் ஆண்டிலும் திரட்டப்பட்டது.

ஒருவேளை எல்ஐசி ஐபிஓ மூலம் ரூ.65ஆயிரம கோடிக்கும் மேல் அதிகாக கிடைத்தால் ஐபிஓ மூலம் அதிக அளவு நிதி கிடைத்த பெருமையைப் பெறும்