Asianet News TamilAsianet News Tamil

LIC Whatsapp: எல்ஐசி-யின் வாட்ஸ்அப் சேவை அறிமுகம்: எப்படி பயன்படுத்தலாம்,என்ன சேவைகள் கிடைக்கும்?:முழுவிவரம்

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்ஐசி, தனது வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ்அப் சேவைகளை இன்று முதல் அறிமுகம் செய்துள்ளது.

Launch of WhatsApp Services by LIC How Users Can Use It, Available Services List
Author
First Published Dec 2, 2022, 4:32 PM IST

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்ஐசி, தனது வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ்அப் சேவைகளை இன்று முதல் அறிமுகம் செய்துள்ளது.

இந்திய காப்பீடு சந்தையில் 60சதவீதத்துக்கும் அதிகமான இடத்தை வைத்துள்ள எல்ஐசியில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். தங்களின் வாடிககையாளர்களுக்கு எல்ஐசி சேவைகள் எளிதாகக் கிடைக்க வேண்டும், ப்ரீமியம் தொகை, பாலிசி நிலவரம், உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை வாட்ஸ்அப் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் எல்ஐசி அறிமுகம் செய்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் சில்லறை டிஜிட்டல் ரூபாய் இன்று அறிமுகம்: முழுவிவரம்

Launch of WhatsApp Services by LIC How Users Can Use It, Available Services List

இனிமேல் எல்ஐசி வாடிக்கையாளர்கள் எல்ஐசி அலுவலகங்களில் சிறிய வேலை, பெரிய வேலை என எதற்காகவும் காத்திருக்கத் தேவையில்லை. எல்ஐசி ஏஜென்ட்டுக்காகவும் காத்திருக்கத் தேவையில்லை.

இதன்படி எல்ஐசியில் வாடிக்கையாளர்களாக, பாலிசி எடுத்திருக்கும் வாடிக்கையாளர்கள், எல்ஐசியில் பதிவு செய்த செல்போன் எண் மூலம் 8976862090 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் “HI” என்று தகவல் அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால், 11 விதமான சேவைகள் செல்போன் திரையில் வரும். அந்த சேவையில் எந்த சேவைதேவையோ அந்த எண்ணைக் குறிப்பிட்டால் வேண்டிய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும்

இந்தியாவில் வேலையின்மை 3 மாதங்களில் இல்லாத அளவு 8 சதவீதமாக நவம்பரில் அதிகரிப்பு:சிஎம்ஐஇ கணிப்பு

வாட்ஸ்அப் மூலம் கிடைக்கும் சேவைகள்

1.    பிரீமியம் நிலுவைத் தொகை

2.    போனஸ் குறித்த தகவல்

3.    பாலிசி நிலவரம்

4.    கடன் தகுதி விவரம்

5.    கடன் திருப்பிச் செலுத்தும் விவரம்

6.    கடன் வட்டி நிலுவை

7.    ப்ரீமியம் செலுத்திய சான்று

8.    யுலிப் ஸ்டேட்மென்ட்

9.    எல்ஐசி சேவை லிங்க்

10.    சேவை விருப்பங்கள்


 

Follow Us:
Download App:
  • android
  • ios