Asianet News TamilAsianet News Tamil

Komaki electric : எலெக்ட்ரிக் குரூயிசர், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்த கோமகி

கோமகி எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் குரூயிசர் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. 

Komaki launches electric cruiser Ranger, e-scooter Venice
Author
Tamil Nadu, First Published Jan 25, 2022, 12:41 PM IST

கோமகி எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் குரூயிசர் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. புதிய எலெக்ட்ரிக் குரூயிசர் மாடல் ரேன்ஜர் என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 1.68 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம்  செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் மாடல் ஜனவரி 26 ஆம் தேதி முதல் கோமகி எலெக்ட்ரிக் விற்பனை மையங்களில் கிடைக்கும். புதிய கோமகி  ரேன்ஜர் மாடல்- கார்னெட் ரெட், டீப் புளூ மற்றும் ஜெட் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை கோமகி ரேன்ஜர் மாடல் குரூயிசர் டிசைனில் குரோம் எக்ஸ்டீரியர், பெரிய வீல்களை கொண்டிருக்கிறது. இதில் வட்ட வடிவம்  கொண்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ரெட்ரோ தீம் கொண்ட இண்டிகேட்டர்கள் உள்ளன. இதில் சிங்கில் பாட் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், குரோம் டிரீட் செய்யப்பட்ட டிஸ்ப்ளே, அகலமான ஹேண்டில்பார்கள் வழங்கப்பட்டுள்ளன.

Komaki launches electric cruiser Ranger, e-scooter Venice

கோமகி ரேன்ஜர் எலெக்ட்ரிக் குரூயிசர் மோட்டார்சைக்கிளில் 4000 வாட் மோட்டார் மற்றும் 4 கிலோவாட் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களில் இத்தகைய பேட்டரி இதுவரை எந்த மாடலிலும் வழங்கப்படவில்லை. இந்த மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 180 முதல் 220 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் ப்ளூடூத் சவுண்ட் சிஸ்டம், சைடு ஸ்டாண்டு சென்சார், குரூயிஸ் கண்ட்ரோல் வசதி, ஆண்டி-தெஃப்ட் லாக் சிஸ்டம், டூயல் ஸ்டோரேஜ் பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

Komaki launches electric cruiser Ranger, e-scooter Venice

ரேன்ஜர் குரூயிசர் மோட்டார்சைக்கிளுடன் கோமகி எலெக்ட்ரிக் நிறுவனம் வெனிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விலை ரூ. 1,15,000 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்பது நிறங்களில் கிடைக்கிறது. இதில் 3 கிலோ வாட் ஹவர் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 2.9 கிலோ வாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனையும் ஜனவரி 26 ஆம் தேதி துவங்குகிறது. 

இதில் வட்ட வடிவ ஹெட்லேம்ப், எல்.இ.டி. யூனிட், எல்.இ.டி. டே-டைம் ரன்னிங் லைட்கள் உள்ளன. முன்புற கவுலில் இண்டிகேட்டர் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

Follow Us:
Download App:
  • android
  • ios