Asianet News TamilAsianet News Tamil

உச்சத்தைத் தொட்ட கோலமாவு விற்பனை... பாஜக - திமுகவால் கிடுகிடு உயர்வு..!

பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் அதற்கு முன்பே திமுக - பாஜக கோலமாவு போராட்டங்களால் கோலமாவு விற்பனை உச்சத்தை தொட்டுள்ளது.

kola mavu sale on the rise
Author
Tamil Nadu, First Published Dec 30, 2019, 1:26 PM IST

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் கோல மாவு தயாரிக்கும் பணி மற்றும் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.  இந்தியக் கலாச்சாரம், குறிப்பாக தமிழக மக்களின் கலாச்சார அடையாளங்களில் கோலங்கள் முக்கியமானது கோலம் வரைதல். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த கோலங்கள் வெவ்வேறு பெயர்களில் இருக்கின்றன. பண்டிகைகளை வண்ணமயம் ஆக்குவதே இந்த கோலங்கள் தான். அதுவும் பொங்கல் பண்டிகையில் இந்த கோலங்களின் பங்கு இன்றியமையாதது.

kola mavu sale on the rise

சேலம் மாவட்டத்தில் கொண்டலாம்பட்டி, சங்ககிரி, உத்தமசோழபுரம், மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 2௦ க்கும் மேற்பட்ட ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 2௦௦ க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சேலத்தில் இருந்து தயாரிக்கும் கோல மாவு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் , ஆந்திரா, கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பத்து முதல் பதினெட்டு டன்  வரை கோல மாவு தினம்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.kola mavu sale on the rise

இது மற்ற நாட்களில் 5 முதல் எட்டு டன் மாவு அனுப்பப்படுகிறது. இதே போன்று கலர் கோல மாவு விற்பனையும் சூடு பிடித்துள்ளது கலர் கோல மாவுக்கு பெயர் போன சேலம் குகை பகுதியில் 2௦ க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.kola mavu sale on the rise

கடந்தாண்டைக் காட்டிலும், நடப்பாண்டு, கோலமாவு விலை உயர்ந்திருக்கிறது என, வியாபாரிகள்  கூறுகின்றனர்.  காரணம் திமுக - பாஜக வினர் மாற்ரி மாற்றி கோலமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கடந்த ஆண்டைக் காட்டிலும், நடப்பாண்டிற்கு, 50 ரூபாய் வரையில், கோல மாவு விலை உயர்ந்திருக்கிறது. இதுகுறித்து, கோலமாவு வியாபாரிகள், ‘’கடந்த ஆண்டு, 50 கிலோ எடை உடைய கோலமாவு மூட்டை, 300 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. இப்போது பாஜக- திமுகவின் கோலப்போராட்டத்தால் ஒரு மூட்டைக்கு, 50 ரூபாய் உயர்த்தி 350 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக கூறுகிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios