Retirement Investment Plan : மாதம் ரூ.5000 ஓய்வூதியம்: மத்திய அரசின் சூப்பர் திட்டம் - முழு விவரம்!

Retirement Investment Plan : ஓய்வூதிய முதலீட்டு திட்டமான மத்திய அரசின் அடல் பென்சன் யோஜா ஓய்வூதிய திட்டத்தின் முழு விவரங்களை இங்கு காணலாம்

Know the details of best retirement investment plan Atal pension yojana You can get monthly rs 5000 smp

Best Retirement Investment Plan : ஓய்வூதியம் என்பது மக்கள் வேலை செய்ய இயலாத போது அவர்களுக்கான மாதந்திர வருமானத்தை உறுதி செய்வதாகும். அரசு வேலை பார்ப்பவர்களுக்கு ஓய்வூதியம் கிடைத்து வரும் நிலையில், அமைப்பு சாரா துறையைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு அடல் பென்சன் யோஜனா எனும் ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

அடல் பென்சன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறுவதை இந்த திட்டம் உறுதி செய்கிறது. இத்திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் அதிகபட்சமாக மாதம் ரூ.5,000 ரூபாய் பென்சன் பெற முடியும். அதேசமயம், குறைந்தபட்ச பென்சன் தொகைக்கான உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது. அதாவது மாதம் ரூ.1000, ரூ.2000, ரூ.3000, ரூ.4000, ரூ.5000 வரை ஓய்வூதியம் பெறலாம்.

இந்த திட்டத்தில் எந்த ஒரு இந்திய குடிமகனும் இணையலாம். சந்தாதாரரின் வயது 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் ஒருவர் பெயரில் ஒரே ஒரு கணக்கு மட்டுமே துவங்க முடியும். அனைத்து தேசிய வங்கிகளும் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. எனவே, உங்கள் வங்கிக் கணக்கு உள்ள வங்கிக்கு நேரடியாக சென்று இத்திட்டத்தில் இணையலாம். உங்களுக்கு வங்கிக் கணக்கு இல்லையென்றால் கட்டாயம் வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும். அல்லது அஞ்சலகத்தில் கணக்கு ஆரம்பித்தும் இந்த திட்டத்தில் இணையலாம். பதிவு செய்வதற்கான படிவங்கள் ஆன்லைனிலும், வங்கிக் கிளைகளிலும் கிடைக்கின்றன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு பரிசு தரப்போகும் மோடி 3.0 அரசு.. 50% ஓய்வூதியம்.. எப்போ தெரியுமா?

உங்களது மொபைல் எண், ஆதார் அட்டையின் புகைப்பட நகல் ஆகிய ஆவணங்கள் தேவை. உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு உறுதி செய்யப்பட்ட குறுஞ்செய்தி வரும். அடல் பென்சன் யோஜனா திட்டத்துக்கு நீங்கள் பதிவுசெய்யும் வயதைப் பொறுத்து பங்களிக்க வேண்டிய தொகை இருக்கும்.

அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் 18 வயதில் இணையும் ஒருவர் மாதம் ரூ.210 வீதம் 60 வயது வரை டெபாசிட் செய்ய வேண்டும். அதாவது நாளொன்றுக்கு ரூ.7 சேமித்தால் போதும். உங்களது 60 வயதுக்கு பின்னர், ஓய்வுக் காலத்தில் மாதம் ரூ.5,000 பென்சன் கிடைக்கும்.

அடல் பென்சன் யோஜனா திட்டம் என்பது வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் தரும் திட்டமாகும். பென்சன் வாங்கும் நபர் இறந்துவிட்டால் அவரது கணவர் அல்லது மனைவிக்கு பென்சன் கிடைக்கும். இருவருமே இறந்துவிட்டால் நாமினிக்கு பணம் கிடைக்கும். இத்திட்டத்திற்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80சிசிடி கீழ் வரிச் சலுகைகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios