jobs hiring  :நாட்டில் கொரோனா தொற்று குறைந்துவிட்ட நிலையில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 2 லட்சம் இளைஞர்களை வேலைக்கு எடுக்கு தயாராகியுள்ளன.

நாட்டில் கொரோனா தொற்று குறைந்துவிட்ட நிலையில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 2 லட்சம் இளைஞர்களை வேலைக்கு எடுக்கு தயாராகியுள்ளன.

கொரோனா காலத்தில் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் ஊழியர்களைவீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதித்தன. இப்போது தொற்று குறைந்ததையடுத்து, ஊழியர்களை மீண்டும் அலுவலகத்துக்கு வரக் கோரியுள்ளன. பொருளாதாரமும் இயல்புநிலைக்கு திரும்பிவருவதால், நிறுவனங்கள் மீண்டும் புதிதாக பணிக்கு ஆட்களைஎடுக்கத் தொடங்கிவிட்டன.

குறிப்பாக பல பன்னாட்டு நிறுவனங்கள் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளன. இந்த நிதியாண்டுக்குள் 1.80 லட்சம் பேர் முதல் 2 லட்சம் பேர் வரை வேலைக்கு எடுக்கப்படலாம் என ஆங்கிலநாளேடு ஒன்று தெரிவித்துள்ளது

 குறிப்பாக, அமெக்ஸ், பேங்க் ஆஃப் அமெரிக்கா, வெல்ஸ் பார்கோ, சிட்டி, பார்க்லேஸ், மோர்கன் ஸ்டான்லி, ஹெச்எஸ்பிசி, ஸ்டானடர்ட் சாராட்டட், கோல்டுமென் சாஸ், அமேசான், டார்கெட், வால்மார்ட், ஷெல், ஜிஎஸ்கே, அபாட், ஃபைசர், ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன், நோவார்ட்டிஸ், அஸ்ட்ராஜென்கா உள்ளிட்ட பல நிறுவனங்கள் தயாராகி வருகின்றன

எக்ஸ்பினோ என்ற மனிதவள நிறுவனத்தின் நிறுவனர் அனில் எதனூர் கூறுகையில் “ கொரோனாவுக்குப்பின் நிறுவனங்கள் புதிதாக பணிக்கு ஆட்களை எடுக்கும் பணியை விரைவுப்படுத்தியுள்ளன. கொரோனாவுக்குப்பின் உலகம் டிஜிட்டல் மயத்தில் அடுத்தக் கட்டத்துக்கு சென்றுவிட்டது. இதனால் தொழில்நுட்பம், டிஜிட்டல் பிரிவில் ஏராளமானோருக்கு வேலை காத்திருக்கிறது. சொலூஷன், கோர் டெவலப்மென்ட்,கிளவுட், சைபர் செக்யூரிட்டி, விர்சுவலைசேஷன், டேட்டா அனாலிட்டிக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் அதிகமான வேலை காத்திருக்கிறது. இது தவிர்த்து செயற்கை நுண்ணறிவு, இணையதளம், ரோபாட்டிக் ஆட்டமேஷன் ஆகிய பிரிவுகளிலும் வேலை காத்திருக்கிறது” எனத் தெரிவித்தார்

நுகர்வோர் ஆய்வுநிறுவனமான நீல்சன் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மோகித் கபூர் ஒருநாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ நீல்சன் நிறுவனம் சென்னை, வதோதரா, புனே ஆகிய நகரங்களில் இரு்து மட்டும் 5ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க இருக்கிறது. இந்தியாவில் அறிவார்ந்த, திறமையான இளைஞர்கள் அதிகமாக இருக்கிறார்கள். பொறியியல், நிதித்துறையில் இருந்து ஏராளமான திறமையான இளைஞர்கள் வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்