itr filing date: ஐடி ரிட்டன் செய்வோர் கவனத்துக்கு! தவிர்க்க வேண்டிய தவறுகள்: கவனிக்க வேண்டிய அம்சங்கள்
வருமான வரி செலுத்துவோர் ரிட்டன் தாக்கல் செய்யும் காலக்கெடு நெருங்கி வருவதால், பரபரப்புடன் காணப்படுவார்கள். தங்களி்ன் முதலீ்ட்டு ஆவணங்கள், வருமான ஆவணங்கள் அனைத்தையும் சேகரிக்கும் முயற்சியில் வருமானவரி செலுத்துவோர் தீவிரமாக இருப்பார்கள்.
வருமான வரி செலுத்துவோர் ரிட்டன் தாக்கல் செய்யும் காலக்கெடு நெருங்கி வருவதால், பரபரப்புடன் காணப்படுவார்கள். தங்களி்ன் முதலீ்ட்டு ஆவணங்கள், வருமான ஆவணங்கள் அனைத்தையும் சேகரிக்கும் முயற்சியில் வருமானவரி செலுத்துவோர் தீவிரமாக இருப்பார்கள்.
2021-22ம் ஆண்டுக்குரிய வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய வரும் 31ம் தேதி கடைசித் தேதியாகும். வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யும் தனிநபர்கள் பொதுவாகச் சில தவறுகளைச் செய்வார்கள், அந்த தவறுகளை அவர்கள் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
இது குறித்து டேக்ஸ்படி.காம் இணையதளத்தைச் சேர்ந்த சுஜித் பங்கர் விளக்கம் அளி்த்துளார். வருமானவரி செலுத்துவோர் 5 தவறுகளைச் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
வரி விலக்கான கிரெடிட்டை பெறாமல் இருப்பது
பல நேரங்களில் ரிட்டன் தாக்கல் செய்தபின் கிடைக்கும் ரீபண்ட் நாம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருக்கும். சில நேரங்களில் ரீபணட் நிலுவை தொடர்பாக நோட்டீஸ் கூட கிடைக்கும். இதற்கு பொதுவான காரணம் டிடிஎஸ் கழிக்கப்படும்போது, அதற்கான கிரெடிட்டை பெறாமல் இருப்பதுதான். வருமானத்தின் அடிப்படையில், வரி கிரெடிட்டை பெறாமல் கழிக்காமல் பலரும் தவறு செய்கிறார்கள். தொழில்முறையில் ஒருவர் ஆவணங்களை ஊதியத்துடன் தாக்கல்ச செய்தால், தனிப்பட்ட ரீதியாக கிடைக்கும் வருமானத்தையும் சேர்க்கும்போது, வருமானவரித்துறையிடம் இருந்து நோட்டீஸ்வரும்.
ஊக வருமானம் vs வழக்கமான வர்த்தக வருமானம்:
வருமானவரி செலுத்துவோர் செய்யும் பெரிய தவறு என்னவென்றால் ஊக வாணிபத்தில் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், பிற வர்த்தகப் பரிவர்த்தனையோடு இணைத்து ஈடுகட்டுவதாகும். சில நேரங்களில் ஊக வணிகத்தில் இழப்பு ஏற்படலாம், வழக்கமான பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கலாம். ஊக வாணிபத்தில் ஏற்படும் இழப்பை , வர்த்தக வருமானத்தோடு அல்லது பங்கு வர்த்தகத்தோடு இணைக்க முடியாது.
வங்கி சரிபார்ப்பு
ஐடிஆர் தாக்கல் தாமதவாதற்கு 3-வது முக்கியக் காரணம், வங்கிக்கணக்கு சர்பார்ப்புதான். பான் மற்றும் ஆதார் இணைத்துவிட்டதை உறுதி செய்ய வேண்டும். இரு ஆவணங்களையும் இணைத்துவிட்டால், வங்கி சர்பார்ப்பு விரைவாக முடியும். மின் சரிபார்ப்பும் வேகமாக நடக்கும்.
சரியான ரிட்டனை தேர்வு செய்தல்:
வருமானவரி செலுத்தும் ஒருவர் ஐடிஆர் படிவத்தை தேர்ந்தெடுப்பதிலும் தவறு செய்வார். ஒருவருக்கு ஒரு வீட்டுக்கு அதிகமாக வீடுகள் இருந்தால், ஐடிஆர்-1 படிவத்தை தாக்கல் செய்ய முடியாது. சரியான ஐடி ரிட்டன் படிவம் அவசியம். ஐடிஆர்-1 படிவம் என்பது ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் இல்லாதவர்கள், குறிப்பாக மாத வருமானம் ஈட்டுவோர், பிற இனங்கள், ஆனால், இவர்கள் ஒருவீடுதான் வைத்திருப்பார்கள். இவர்கள் எளிமையான ரிட்டன் செய்யும் முறைதான் ஐடிஆர்-1.
படிவம்16-ஆல் வரியை சேமிக்க முடியாது
மாத வருமானம் ஈட்டும் தனிநபர்கள், தவறாக நினைத்துக்கொண்டிருக்கும் அம்சம் என்னவெனில் டிவம் 16க்கு அப்பால் வரியைச் சேமிக்க முடியாது என்ற தவறான கருத்தைவைத்துள்ளனர். வரி விலக்குகளைப் பற்றி புதிதாகப் பார்க்காமல் படிவம் 16 இன் ஐடிஆர் தாக்கல் செய்கிறார்கள். உதாரணமாக, குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம், ஆர்டிபிசிஆர் பரிசோதனை ஆகியவற்றுக்கு கூட 80டி பரிவில் ரூ.5ஆயிரம் விலக்கு இருக்கிறது
மனதில் வைக்க வேண்டிய 5 அம்சங்கள்:
1. சிக்கல் இல்லாமல் வருமானவரி ரிட்டன் தாக்கல் வருமானவரித்துறை ஏற்கெனவே நிரப்பப்பட்ட படிவங்களை வழங்குவார்கள். ஆதலால் தாக்கல் செய்ய வேண்டிய அனைத்து ஆவணங்களையும் நாம் சரியாக வைத்திருந்து, ஏற்கெனவே நிரப்பப்பட்ட படிவத்தை சரிபார்த்தால் போதுமானது.
2. உங்களுடைய அனைத்து வருமான இனங்களையும் குறிப்பிட்டதை உறுதி செய்ய வேண்டும். இது எந்தவிதமான அபராதமும் செலுத்தாமல் தவிர்க்க முடியும்
3. படிவம்-16 மற்றும் 26ஏஎஸ் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்து வரிக்கழிவை சரிபார்த்தபின் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும். படிவம்-16, 26ஏஎஸ் இரண்டுமே வெவ்வேறானவை. நாம் பணியாற்றும் நிறுவனத்தை அணுகி அதை சரி செய்யலாம். படிவம் 16 என்பது பணியாற்றும் நிறுவனம் நாம் பெறும் ஊதியம் குறித்த விவரங்கள், டிடிஎஸ்பிடிதத்தை தெரிவிக்கும். படிவம்27ஏஎஸ் என்பது, உங்களுடைய ஊதியத்திலிருந்து பிடிக்கப்பட்ட வரி, செலுத்தப்பட்ட வரியைக் குறிக்கும்.
4. நாம் ரிட்டன் தாக்கல் செய்வது பழைய வரிவிதிப்பிலா அல்லது புதிய விரிவிதிப்பாலா என்பதை தேர்வு செய்ய வேண்டும்
5. ஐடிஆரைச் சரிபார்க்கும் வரை செயல்முறை முடிவடையாது. ஆதலால், வருமான வரியைத் தாக்கல் செய்த பிறகு வருமானம் குறித்து ஆன்லைனில் சரிபார்த்து அதை உறுதி செய்ய வேண்டும்