Asianet News TamilAsianet News Tamil

வேலம்மாள் கல்வி குழுமத்தில் ஐடி ரெய்டு... கணக்கில் வராத சொத்துக்கள் இத்தனை கோடிகளா..?

வேலம்மாள் கல்விக் குழுமத்தில் கடந்த 3 நாட்களாக 64 இடங்களில் நடைபெற்று வந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.532 கோடி சொத்துக்களும் ஆவணங்களும், ரூ.2 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. 

IT Raid in Velammal Education Group
Author
Tamil Nadu, First Published Jan 24, 2020, 6:28 PM IST

வேலம்மாள் கல்விக் குழுமத்தில் கடந்த 3 நாட்களாக 64 இடங்களில் நடைபெற்று வந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.532 கோடி சொத்துக்களும் ஆவணங்களும், ரூ.2 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. IT Raid in Velammal Education Group

தமிழகத்தில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேலம்மாள் கல்வி குழுமம், சென்னை, காஞ்சிபுரம், தேனி, கரூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்  இயங்கி வருகிறது.  மெட்ரிகுலேசன் பள்ளி முதல் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் வரை இந்தக் குழுமத்திற்கு சொந்தமாக செயல்பட்டு வருகிறது.IT Raid in Velammal Education Group

இந்நிலையில், மருத்துவக் கல்லூரியில் மாணவர்களிடம் அதிகமாக டொனேஷன் வசூலித்தது, வரி ஏய்பு புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, சென்னை, மதுரை உள்பட 60-க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். வேலம்மாள் குழுமத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக வேலம்மாள் கல்வி குழுமத்தின் வாகனங்களை சோதனை நடைபெற்றது.

 IT Raid in Velammal Education Group

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.532 கோடி சொத்து ஆவணங்களும், ரூ.2 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சோதனை நிறைவு பெற்றாலும் விசாரணை தொடரும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios