ஏறுமுகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி; முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!!
இன்றைய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 61,000 புள்ளிகளைக் கடந்தும், நிப்டி 18,100 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமாகி வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று மட்டும் சென்செக்ஸ் 363.80 புள்ளிகள் அதிகரித்து காணப்பட்டது. நிப்டி 99.50 புள்ளிகள் அதிகரித்து காணப்பட்டது. நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடுகள் 0.3% வரை உயர்ந்தன. நிப்டி அங்கி மற்றும் நிப்டி பார்மா நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு சுமார் ஒரு சதவீதம் உயர்ந்து காணப்பட்டது.
சென்செக்ஸ்சில் இடம் பெற்று இருக்கும் டாக்டர் ரெட்டிஸ், என்டிபிசி, பவர் கிரிட், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை ஏறுமுகத்துடன் காணப்பட்டன. ஆக்சிஸ் வங்கி, லார்சன் அண்ட் டூப்ரோ, டாடா ஸ்டீல் ஆகியவற்றின் பங்குகள் சற்று சரிந்து காணப்பட்டன.
ஆசிய பங்குச் சந்தைகளான சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சந்தைகளின் பங்கு வர்த்தகம் உயர்ந்து பாசிட்டவாக உள்ளது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) திங்களன்று ரூ. 4,178.61 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கி இருப்பது சாதகமாக அமைந்துள்ளது.
இந்தியாவில் அறிமுகமாகும் டிஜிட்டல் நாணயம் - ரிசர்வ் வங்கி அசத்தல் அறிவிப்பு !!
அடுத்த சில நாட்களில் தொடர்ந்து சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படலாம். அமெரிக்க பெடரல் வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இங்கிலாந்து உள்ளிட்ட மத்திய வங்கிகள் தங்களது கொள்கைக் கூட்டங்களை நடத்தவுள்ளன. அதே நேரத்தில் ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து 3 காலாண்டுகளாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தவறியதால் அவசரக் கூட்டத்தை கூட்ட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், அமெரிக்காவில் பங்கு வர்த்தகம் கலவையாக அமைந்துள்ளது. ஜிடிபி உயர்ந்துள்ளது. இருப்பினும் ஊதியங்கள் பலவீனமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Stock Market Today: சாதகமான உலக வர்த்தகம்; சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு!!