IT dept:வருமானவரி செலுத்துவோரின் குறைகளைத் தீர்க்க வேண்டும், சிக்கல்களைக் களைய வேண்டும் என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாக கூறியதையடுத்து, வருமான வரித்துறை அலுவலங்கள் மார்ச் மாதம் வரக்கூடிய அனைத்து சனிக்கிழமைகளிலும் அலுவலகத்தை திறந்துவைக்க முடிவு செய்துள்ளன.

IT dept:வருமானவரி செலுத்துவோரின் குறைகளைத் தீர்க்க வேண்டும், சிக்கல்களைக் களைய வேண்டும் என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாக கூறியதையடுத்து, வருமான வரித்துறை அலுவலங்கள் மார்ச் மாதம் வரக்கூடிய அனைத்து சனிக்கிழமைகளிலும் அலுவலகத்தை திறந்துவைக்க முடிவு செய்துள்ளன.

நிர்மலா காட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களுருவில் ஒரு நிகழ்ச்சியில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது, வருமானவரி்த்துறை, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அதிகாரிகள் கடுமையாக கடிந்து கொண்டு நிர்மலா சீதாராமன் பேசினார். 

நிர்மலா சீதாராமன் பேசுகையில் “ மத்திய நேரடி வரிகள் வாரியம், மறைமுகவரிகள் வாரிய அதிகாரிகள் இருக்கிறார்களா. உங்களின் வாடிக்கையாளர்களை சரியாக நடத்துகிறீர்களா. மற்ற கேள்விகளை நான் துறை அதிகாரிகளிடம் கேட்டு, விளக்கம் பெறுகிறேன் இதற்கு பதில் கூறுங்கள். வாரியங்கள் வரிசெலுத்துவோர்களுக்காக இருக்க வேண்டும். நேரடி வரிகள், மறைமுகவரிகள் வாரிய அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் திறந்துவைத்து வரிசெலுத்துவோரிந் குறைகளைத் தீர்த்து வையுங்கள், அவர்களுக்கு தேவையான விளக்கங்கள், சந்தேகங்களுக்கு பதில் அளியுங்கள்” எனத் தெரிவித்தார்

நடவடிக்கை எடுக்கவில்லை

வருமானவரி செலுத்துவோரின் குறைகளை களைவதற்கு வருமானவரித்துறை போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு வருகிறது, அவர்களின் குறைகளைத் தீர்க்க நீண்டகாலம் எடுத்துக்கொள்கிறீர்கள் என்று சாடினார். 
நிர்மலா சீதாராமன் காட்டமாகப் பேசியபோது, வருமானவரித்துறை, மத்திய மறைமுகவரிகள் வாரியம், சுங்கத்துறை, ஜிஎஸ்டி பிரிவு அதிகாரிகளும் இருந்தனர். 

இதையடுத்து வருமானவரி செலுத்துவோரின் குறைகளைக் களைய தேவையான நடவடிக்கைகளை எடுக்க நேரடிவரிகள் வாரியம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

சனிக்கிழமைகளில் அலுவலகங்கள்

இதன்படி, மார்ச் மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் வருமானவரித்துறை அலுவலகங்கள் நாடுமுழுவதும் செயல்பட உத்தரவிடப்பட்டது. அன்றைய தினம் அலுவலகம் வழக்கம்போல் செயல்படும், வருமானவரி செலுத்துவோரின் குறைகளுக்கு உடனுக்குடன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது, ட்விட்டர், மின்அஞ்சலிலும் உத்தரவு வெளியிடப்பட்டது. 

வழக்கமாக வருமானவரித்துறை அலுவலகத்துக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறையாகும். 
இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் வரி செலுத்துவோர் தங்களுக்கு எழும் கேள்விகள், சந்தேகங்கள், ஆலோசனைகளை வருமானவரித்துறை அலுவலர்களிடம் தெரிவிக்கலாம்.