எள்ளு, நிலக்கடலை, தேங்காய், சூரியகாந்தி எண்ணெய் என்ற பெயரில் கந்தகமும், பெட்ரோலிய கழிவுகளும், அதே எண்ணெய் போல தயாரித்த வாசனைகளும் கலந்தால் நம் உடல் என்னவாகும்..? எங்கிருந்தோ, யாராலோ தயாரித்து தரப்படும் எண்ணெயை நாம் வாங்கி உயபயோகிப்பதால் எத்தனையோ கெடுதல்கள். யார் எக்கேடு கெட்டால் என்ன என்கிற சுயநலப்போக்கு தான் இங்கே எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களின் நிலையாக இருக்கிறது. இது மனிதச் செயலா?

எண்ணெய் கலப்படம் ஒரு சர்வ தேச மோசடி. கொலை பாதக செயல். நூடில்ஸ் மோசடியை விட இது கோடிக்கணக்கான மடங்கு விஷக் கொலைச் செயல்!?
நமது தேகம்  உயிர் உடலா..? இல்லை கெமிக்கல் பேரலா..? அரசின் தீர்வுதான் என்ன?  உணர்வு செத்து வேடிக்கை பார்க்கும் குருட்டு சுகாதார அமைச்சகம் எப்படித் தீர்வு காணும்..? இனி இதுபோன்ற ஆத்திரமும், ஆதங்கமும் நமக்குத் தேவையில்லை.  

நாமே நமக்குத் தேவையான சுத்தமான எண்ணெயை நம்பிக்கையுடன் தயார் செய்து கொள்ளலாம். எண்ணெய் கலப்படத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், எண்ணெய் அதிகமாக உபயோகப்படுத்தும் மக்களுக்குத் தூய எண்ணெய் பெறும் வகையில் நாமே நம் வீட்டில் உபயோகப்படுத்திக் கொள்ளும் வகையில் இயந்திரங்கள் சந்தையில் அறிமுகமாகியுள்ளன. வீட்டிலேயே எண்ணை பிழியும் இயந்திரங்கள் சந்தைக்கு வந்துள்ளன.

இந்த இயந்திரத்தை கொண்டு வீட்டிலேயே கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், போன்ற அனைத்து விதமான சமையலுக்கு தேவையான சுத்தமான, ஆரோக்கியமான எண்ணை வகைகளை நமக்கு தேவையான அளவு அவ்வப்போது மட்டுமல்லாது, மொத்தமாகவும் பிழிந்து எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒர்த் கண்ட்ரோல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கடந்த மூன்று வருடங்களாக  என்ற எளிய வகையான, வீட்டிலேயே எண்ணை பிழியும் இயந்திரத்தை உருவாக்கி உள்ளனர். வீடுகளில் பயன்படுத்தவும், வணிகமுறைக்காக இரு இயந்திரங்களை அறிமுகப்படுத்தி உள்ளது இந்த நிறுவனம்.

அத்தோடு பாதம், பிஸ்தா, போன்ற எண்ணை வகைகளையும், நாமே சுத்தமான முறையில் அரைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். நமது வீடுகளில் இருக்க வேண்டிய முக்கியாமான பொருட்களில் இதுவும் ஒன்று. நாமே தரமான பொருட்களை விலைக்கு வாங்கி தேவையான அளவு பயன்படுத்திக் கொள்வதால் நம்பிக்கையுடன் உணவுப்பொருட்களில் சேர்த்துக் கொள்ளலாம். கொஞ்சம் சிரமம் இருந்தாலும் சிரத்தை எடுத்துக் கொண்டு நமது ஆரோக்கியத்தை பாதுகாப்பது நமது உயிரைக்காக்கவே.!