ரயில் பயணிகள் தட்கல் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு புதிய வசதியை ஐஆர்சிடிசி அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயணம் செய்வோர் டிக்கெட் எளிதாக எந்தவிதமான சிரமும் இன்றி பெற முடியும்
ரயில் பயணிகள் தட்கல் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு புதிய வசதியை ஐஆர்சிடிசி அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயணம் செய்வோர் டிக்கெட் எளிதாக எந்தவிதமான சிரமும் இன்றி பெற முடியும்
நம்முடை பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும்போது அதற்கு ரயிலில் டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டு, நிம்மதியாகப் பயணிப்போம். ஆனால், எதிர்பாராதவிதமாக ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும், அவசரப்பணி காரணமாகச் செல்லும்போது, குறிப்பிட்ட வழித்தடத்தில், ரயிலில் டிக்கெட் கிடைக்காத சூழல் இருக்கும். அத்தகைய சூழலில் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி இருக்கிறது.

ஆனால், தட்கல் முறையில் டிக்கெட்டையும் எளிதாக பெற முடியாது. தட்கல் ஆரம்பித்த சில வினாடிகளில் டிக்கெட் வேகமாக நிரம்பிவிடும் என்பதால், அதிலும் கடும்போட்டி நிலவும்.
இதுபோன்ற இக்கட்டான சூழலைத் தவிர்க்கவும், பயணிகள் எளிதாக தட்கலில் டிக்கெட் பெறவும் ஐஆர்சிடிசி புதிய வழியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவுக்கென்றே பிரத்யேகமாக “கன்ஃபார்ம்டிக்கெட்” (Confirmticket) என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த மொபைல் செயலி, தட்கல் புக்கிங் வசதிக்காகவே மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும். இனிமேல் தட்கல் நேரத்தில் பதற்றத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்யாமல் இந்த செயலியில் மிகவும் ரிலாக்ஸாக டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.

இ்ந்த கன்ஃபிர்ம்டிக்கெட் செயலியில் பயணிகள், தாங்கள் பயணம் செய்யும் நகரத்துக்கு எத்தனை ரயில்கள் செல்கின்றன. ஒவ்வொரு ரயிலிலும் எத்தனை பெட்டிகள், அதில் காலியாக இருக்கும் இருக்கை, படுக்கை விவரங்களை அறிய முடியும். குறிப்பிட்ட வழித்தடத்துக்கு தட்கல் டிக்கெட்முன்பதிவு இருக்கிறதா அல்லது இல்லையா என்பதையும் இந்த செயலி கூறிவிடும்.
பயணிகளுக்கு உதவியாக ஐசிஆர்சிடிசி அறிமுகம் செய்த இந்த செயலியை கூகுள் ப்ளேஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
இதில் முக்கிய அம்சமாக இந்த செயலியில் தட்கல் முன்பதிவு செ்யது அதில் பயணிக்க முடியாமல் டிக்கெட்டை கேன்செல் செய்தால், அதற்கு கட்டணம் இல்லை. மேலும் பயணிகள் தங்களின் தனிப்பட்ட விவரங்களையும் சேகரித்து வைக்க முடியும்
. இதன் மூலம் தட்கல் நேரத்தில் டைப் செய்யும் நேரம் மிச்சமாகும், ஒவ்வொருமுறையும் டிக்கெட் முன்பதிவின்போது பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவிடுவது தவிர்க்கப்படும்.

ரயிலில் காலியிடத்தைப் பொறுத்தே தட்கல் முன்பதிவு செய்ய முடியும். ஒருவேளை டிக்கெட் முன்பதிவில் கட்டணமும் செலுத்தியபின் காத்திருப்புபட்டியலில் வந்தால், டிக்கெட் ஏதேனும் ரத்தானவுடன் தானாகவே உறுதியாகும். இந்த செயலி மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்தால், தனியாக கட்டணம் வசூலிக்கப்படும்
