அவசர காலங்களில் அல்லது தொலைதூரப் பகுதிகளில் பயணம் செய்யும்போது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ​​பயன்படுத்தி பணம் எடுக்கவேண்டிய கட்டாயமாக ஏற்படலாம். அந்த நேரத்தில் ஒரு ஏடிஎம்மைக் கண்டறிவதும், விரைவாகப் பணம் எடுப்பதும் சிரமமாக இருக்கும்.

UPI முறை பணப் பரிவர்த்தனைகளைக் கையாளும் விதத்தை மாற்றியமைத்துள்ளது. ஸ்மார்ட்போன் மற்றும் இணைய இணைப்பு மூலம் தனிநபர்கள் வசதியாக ஆன்லைனில் பணம் செலுத்தலாம். ஆனால் இந்த டிஜிட்டல் முறைகளை நம்பியிருப்பது எல்லா இடங்களிலும் கைகொடுக்காது.

குறிப்பாக அவசர காலங்களில் அல்லது தொலைதூரப் பகுதிகளில் பயணம் செய்யும்போது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ​​பயன்படுத்தி பணம் எடுக்கவேண்டிய கட்டாயமாக ஏற்படலாம். அந்த நேரத்தில் ஒரு ஏடிஎம்மைக் கண்டறிவதும், விரைவாகப் பணம் எடுப்பதும் சிரமமாக இருக்கும்.

இந்தச் சிரமத்திற்கு தீர்வு காண பேமெண்ட் இந்தியா நிறுவனம் ஒரு தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. சண்டிகரைச் சேர்ந்த நிதி தொழில்நுட்ப நிறுவனமான பேமெண்ட் இந்தியா கார்டுகள் இல்லாமலே பணத்தை எடுக்கும் சேவையை வழங்குகிறது. இந்த முறையில் ஸ்மார்ட்போன்களை மட்டுமே பயன்படுத்தி அருகிலுள்ள கடைக்காரர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

இது ஏடிஎம்மிற்குச் செல்ல வேண்டிய தேவையைப் போக்குகிறது. குறித்து பேமெண்ட் இந்தியா நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. அமித் நரங், இந்த சேவையை விர்சுவல் ஏ.டி.எம் (Virtual ATM) என்று குறிப்பிடுகிறார்.

விர்சுவல் ஏடிஎம் மூலம் பணத்தை எடுப்பது எப்படி?

பணம் எடுப்பதற்கு மெய்நிகர் ஏடிஎம்மைப் பயன்படுத்த, உங்களுக்கு ஸ்மார்ட்போன், மொபைல் பேங்கிங் பயன்பாடு மற்றும் இணைய இணைப்பு ஆகியவை தேவைப்படும். உங்கள் மொபைல் பேங்கிங் ஆப் மூலம் மொபைல் எண் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும்.

வங்கி OTP உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். கடைக்காரரிடமிருந்து உங்கள் பணத்தைப் பெற அருகிலுள்ள PayMart கடைக்குச் சென்று OTPயைக் காண்பித்துப் பணம் பெறலாம். PayMart மூலம் விர்சுவல் ஏடிஎம் சேவைகளை வழங்கும் அருகில் உள்ள கடைக்காரர்களின் பெயர்கள், இருப்பிடம் மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்கள்ளை அறியலாம். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, யுபிஐ எதவும் பணம் எடுப்பதற்குத் தேவையில்லை.

ஏடிஎம்மைக் கண்டறிவது சவாலானதாக இருக்கும் பகுதிகளில் இந்தச் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அல்லது டிஜிட்டல் பேமெண்ட்டுகளை ஏற்கும் கடைகளை அணுகலாம்.

விர்சுவல் ஏடிஎம்களை யார் பயன்படுத்தலாம்?

Paymart வெளியிட்ட அறிக்கையின்படி, விர்சுவல் ATM சேவையானது IDBI வங்கியுடன் ஆறு மாதங்களுக்கும் மேலாக சோதனைக் கட்டத்தில் உள்ளது. இந்த சேவையை அறிமுகப்படுத்த இந்தியன் வங்கி, ஜம்மு & காஷ்மீர் வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கி ஆகியவற்றுடன் இந்நிறுவனம் இணைந்துள்ளது.

தற்போது, ​​சண்டிகர், டெல்லி, ஹைதராபாத், சென்னை மற்றும் மும்பையில் உள்ள குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இந்த மெய்நிகர் ஏடிஎம் சேவை பயன்புடத்த முடியும். இந்த மெய்நிகர் ஏடிஎம் சேவையைப் பயன்படுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விர்சுவல் ஏடிஎம்களைப் பயன்படுத்தி எவ்வளவு பணம் எடுக்கலாம்?

இந்த வசதியைப் பயன்படுத்தி ஒரு பரிவர்த்தனையில் குறைந்தபட்சம் ரூ.100 மற்றும் அதிகபட்சம் ரூ.2,000 வரை எடுக்கலாம். மாதந்தோறும் ரூ. 10,000 வரை பணம் எடுக்கலாம். விர்ச்சுவல் ஏடிஎம் சிறிய தொகைகளைப் பெறுவதற்கு சாதகமாக இருந்தாலும், பெரிய அளவில் பணம் எடுப்பதற்கு இது பொருத்தமாக இருக்காது. ஏனெனில் கடைக்காரர்கள் கையில் குறைந்த பணமே இருக்கும்.

விர்ச்சுவல் ஏடிஎம் வங்கிகளுக்கு உதவுமா?

விர்ச்சுவல் ஏடிஎம்கள் அனைத்து பகுதிகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பணம் கிடைக்க உதவுகின்றன. வக்கமான ஏடிஎம்களை நிறுவுதல் மற்றும் பராமரிப்பதற்கான செலவுகளைத் தவிர்க்கலாம். இது வங்கிக் கிளைகள் நிறுவுவதற்கான அவசியத்தையும் குறைக்கிறது. மேலும் இந்த விர்சுவல் ஏ.டி.எம். முறையில் இணையும் கடைக்காரர்கள் கமிஷன் பலன்களைப் பெறுவார்கள்.