India Forex Reserve:இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சி| 10 மாதங்களில் இல்லாத அளவு சரிந்தது
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவு பிப்ரவரி 10ம் தேதிவரை 830 கோடி டாலர் குறைந்து, 5669 கோடி டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவு பிப்ரவரி 10ம் தேதிவரை 830 கோடி டாலர் குறைந்து, 5669 கோடி டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 6ம் தேதிக்குப்பின் அந்நியச் செலாவணி கையிருப்பு மோசமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 2வது வாரமாக, அந்நியச் செலாவணி சொத்துக்களும் 710 கோடி டாலர் குறைந்து, 5005 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
பிப்ரவரி 10ம் தேதி நிலவரப்படி, டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 80 பைசா சரிந்து, ரூ.85.51ஆகக் குறைந்துவிட்டது. அமெரிக்காவின் வேலைவாய்ப்பு நிலவரங்கள் மோசமானதையடுத்தும், பணவீக்கம் அதிகரிப்பாலும், பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்தியதால் ரூபாய் மதிப்பு நெருக்கடிக்குள்ளானது.
டாலர் மதிப்பு வலுப்பெறும்போது, வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கரன்சிகள் கடும் நெருக்கடிக்குள்ளாகின்றன.
மார்ச் 31-க்குள் முதலீடு செய்யுங்க| மாதம் ரூ.18,500 ஓய்வூதியம் தரும் அரசு பென்ஷன் திட்டம் முடிகிறது
அமெரிக்காவில் பணவீக்கம் குறையாமல் இருப்பதால், அடுத்துவரும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் வட்டி வீதத்தை உயர்த்தும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே பெடரல் ரிசர்வ் இதுவரை 450புள்ளிகள் வட்டியை உயர்த்திவிட்டன. இனிமேலும் அதிகரிக்கும்பட்சத்தில் வளரும் நாடுகளின் கரன்சி மதிப்பு அதிகமாக நெருக்கடிக்குள்ளாகும்.
கடந்த 2022 செப்டம்பர் மாதத்தில் இருந்து 2023 பிப்ரவரி 10ம் தேதி வரை இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 10000 கோடி டாலர் குறைந்துள்ளது. 2022 ஜூன் முதல்அக்டோபர் வரை உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியை தீவிரமாக உயர்த்தியது. இந்த நேரத்தில் டாலரை அதிகமாக சந்தையில் வெளியேற்ற வேண்டிய நிலை ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டதால் ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்தது, அந்நியச் செலாவணி கையிருப்பும் வேகமாகக் குறைந்தது.
ஜார்ஜ் சோரஸ் பேச்சு இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: ஸ்மிருதி இரானி கொந்தளிப்பு
ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் இருந்து ஜனவரி வரை அந்நியச் செலாவணி 2890 கோடி டாலர் அதிகரித்துள்ளது. இந்தியாவிடம் ஜனவரி 27ம் தேதி நிலவரப்படி அந்நியச் செலாவணி கையிருப்பு 5768 கோடி டாலர் என்பது 10 மாதங்கள் இறக்குமதிக்கு தேவையான டாலர் இருப்பு உள்ளது என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.