2021-22ம் நிதியாண்டில் இந்தியாவின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி 5ஆயிரம் கோடி டாலருக்கு நடந்துள்ளது. வேளாண் பொருட்களைப் பொறுத்தவரை இதுவரை இந்த அளவுக்கு ஏற்றுமதி நடந்ததில்லை என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2021-22ம் நிதியாண்டில் இந்தியாவின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி 5ஆயிரம் கோடி டாலருக்கு நடந்துள்ளது. வேளாண் பொருட்களைப் பொறுத்தவரை இதுவரை இந்த அளவுக்கு ஏற்றுமதி நடந்ததில்லை என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020-21ம் ஆண்டில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி 17.66 சதவீதம் வளர்ந்து 4187 கோடி டாலர் அளவுக்கு இருந்தது.ஆனால், 2021-2022ம் ஆண்டில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி 19.92 சதவீதம் அதிகரித்து 5021 கோடி டாலராக அதிகரித்தது.

அதிகபட்சமாக அரிசி ஏற்றுமதி 965 கோடி டாலருக்கும், கோதுமை 219 கோடி டாலருக்கும், சர்க்கரை 460 கோடி டாலருக்கும், பருப்பு வகைகள் 108 கோடி டாலருக்கும் ஏற்றுமதியாகியுள்ளன.
கோதுமை ஏற்றுமதி முன்எப்போதும்இல்லாத வகையில் 273 சதவீதம் அதாவது 4 மடங்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடந்த 2020-21ம் ஆண்டில் 56.80 கோடிக்கு ஏற்றுமதி நடந்த நிலையில் 273 சதவீதம் 2021-22ம் ஆண்டில் அதிகரித்து, 211.90 கோடி டாலருக்கு நடந்துள்ளது.
பஞ்சாப், ஹரியானா, உ.பி., பிஹார், மே.வங்கம், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களி்ல் இருந்து வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி 771 கோடி டாலருக்கு நடந்துள்ளது. மேவங்கம், ஆந்திரா, ஒடிசா, தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் கடல்பகுதியிலிருந்து ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி 400 கோடி டாலராக 2வது ஆண்டாக அதிகரித்துள்ளது. காபி ஏற்றுமதி 100 கோடி டாலருக்கு நடந்துள்ளது. கர்நாடகா, தமிழகம், கேரளாவிலிருந்து காபி ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
இது தவிர வாரணாசியிலிருந்து காய்கறிகள், மாம்பழங்கள், ஆனந்தபூரிலிருந்து வாழைப்பழம், நாக்பூரிலிருந்து ஆரஞ்சுப் பழங்கள், லக்னோவிலிருந்து மாம்பழம், தேனியிலிருந்து வாழைப்பழம், சோலாபூரிலிருந்து மாதுளை, கிருஷ்ணா சித்தூரிலிருந்து மாம்பழம் ஆகிய ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
