Asianet News TamilAsianet News Tamil

கடும் விலைவாசி உயர்வு: 2021ம் ஆண்டில் மளிகைப் பொருட்கள் செலவுக்கு பிரேக் போட்ட இந்தியர்கள்: ஆய்வில் தகவல்

இந்தியாவில் 2021ம் ஆண்டில் மளிகைப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் கடுமையான விலைவாசி ஏற்றத்தைச்சந்தித்ததால், அந்த பொருட்களுக்குச் செலவிடும் தொகையை இந்தியர்கள் குறைத்துக்கொண்டனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

Indians put brakes on grocery spending as prices rose in 2021
Author
New Delhi, First Published Feb 3, 2022, 11:57 AM IST

இந்தியாவில் 2021ம் ஆண்டில் மளிகைப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் கடுமையான விலைவாசி ஏற்றத்தைச்சந்தித்ததால், அந்த பொருட்களுக்குச் செலவிடும் தொகையை இந்தியர்கள் குறைத்துக்கொண்டனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

கிராமப்புற நுகர்வோர்கள், நகர்ப்புற நுகர்வோர்கள் மனநிலை, செலவிடும் விதம் குறித்தும் ஆய்வு செய்த ஐஎம்ஆர்பி சர்வதேச நிறுவனம் தெரிவித்துள்ளது. 2021ம் ஆண்டில் இந்தியர்கள் மளிகை மற்றும் வேகமாக நுகரும் பொருட்கள் வாங்கிய அளவு வெறும் 0.1% மட்டுமே உயர்ந்துள்ளதாக அதிர்ச்சித் தெரிவித்துள்ளது.

Indians put brakes on grocery spending as prices rose in 2021

உலகளவில் நுகர்வோர்களுக்குரிய மிகப்பெரிய சந்தையைக் கொண்டுள்ள இந்தியாவில் மளிகைப்பொருட்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் விற்பனை, கொள்முதல் கடந்த ஆண்டு வெறும் 0.1% மட்டுமே உயர்ந்திருக்கிறது.

கிராமப்புறங்களில் மளிகைப் பொருட்கள், வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை 1.3% அளவுக்கு மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால், நகர்ப்புறங்களில் இந்த பொருட்களின் தேவை1.1% அளவுக்கு குறைந்திருக்கிறது. பெரும்பாலான நிறுவனங்களுக்கு நகர்ப்புற மக்கள் வசிக்கும்பகுதிதான் மிகப்பெரிய சந்தை ஆனால், அங்கு பொருட்களுக்கான தேவை குறைந்தது அதிர்ச்சியளிக்கிறது.

இது குறித்து பார்லி நிறுவனத்தின் மூத்த அதிகாரி கிருஷ்ணாராவ் புத்தா அளித்த பேட்டியில் “கடந்த 2020ம் ஆண்டில் நுகர்வோர் பொருட்கள் பிரிவில் நல்ல முன்னேற்றம் விற்பனை இருந்தது, ஏறக்குறைய 4.2 சதவீதம் வளர்ச்சி இருந்தது. உணவுப்பொருட்கள் பிரிவு, மளிகைப் பொருட்கள் விற்பனை நன்றாக இருந்தது. ஆனால், 2021ம் ஆண்டில் விலைவாசி தொடர்ந்து உயர்ந்ததால், நுகர்வோர்கள் பொருட்களை வாங்கினாலும் அதன் அளவை குறைத்துக்கொண்டனர்” எனத் தெரிவித்துள்ளார்

வீட்டுப்பாராமரிப்புப் பொருட்கள், தனிப்பட்ட நபருக்கான பொருட்கள் விற்பனை கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது. ஆனால், மளிகைப் பொருட்கள், உணவுப்பொருட்கள் விற்பனை குறைந்துள்ளது.

Indians put brakes on grocery spending as prices rose in 2021

இதன் காரணமாக உணவுப்பொருட்கள், மளிகைப் பொருட்கள் விற்பனையை நம்பியிருக்கும் இருக்கும் பல்வேறு நிறுவனங்களின் பொருட்ள் விற்பனை படுத்துவிட்டது, ஆனால் வருமானம் குறையவில்லை. இதற்கு முக்கியக் காரணம் பொருட்களின் விலைவாசி உயர்ந்ததால் அந்தநிறுவனங்களின் விற்பனை அதிகரிக்காவிட்டாலும் வருமானம் அதிகரித்துள்ளது.

Indians put brakes on grocery spending as prices rose in 2021

ஐஎம்ஆர்பி சர்வதேச நிறுவனத்தின் தெற்காசிய பிரிவு மேலாண் இயக்குநர் கே.ராமகிருஷ்ணன் கூறுகையில் “ உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலைவாசி ஏற்றத்தால், நுகர்வோர்கள் பொருட்கள் வாங்கும் அளவைக் குறைத்துவிட்டனர்.

இதனால் பல இடங்களில் பொருட்கள் தேக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வேகமாக நுகரும் எப்எம்சிஜி பிரிவில் பொருட்கல் விற்பனை தேக்கமடைந்தது. அதிலும் 2021ம் ஆண்டில் கடைசி காலாண்டில் பொருட்களின் தேவை 2 சதவீதம் அளவு நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் குறைந்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் பணவீக்கம்தான்” எனத் தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios