வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்துள்ளதால், உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் வலிமை உயர்ந்துள்ளது.

அதே சமயத்தில், உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் சரிவு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் சற்று சரிவு ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் சரிந்து ரூ.66.82 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், , கடந்த வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.66.53 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரூபாயின் மதிப்பில் இந்த சரிவு ஏற்பட காரணம் , அமெரிக்கா பெடரல் வங்கி , வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை தொடர்ந்து, இந்த சரிவு காணப்பட்டது.

 மேலும் , இந்திய பங்கு வர்த்தகமும் கடும் சரிவை சந்தித்தது.