us dollar to indian rupee : வரலாற்றுச் சரிவு: இந்தியா ரூபாய் மதிப்பு ரூ.79.36 ஆக வீழ்ந்தது: காரணம் என்ன?
இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக இன்று வர்த்தகம் முடிவில் புதிய உச்ச வீழ்ச்சியாக 41 காசுகள் குறைந்து ரூ.79.36 காசுகளாகச் சரிந்தது. ரிசர்வ் வங்கி தலையிட்டு, மதிப்புச் சரிவைத் தடுக்க வேண்டியநிலையில் உள்ளனர்.
இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக இன்று வர்த்தகம் முடிவில் புதிய உச்ச வீழ்ச்சியாக 41 காசுகள் குறைந்து ரூ.79.36 காசுகளாகச் சரிந்தது. ரிசர்வ் வங்கி தலையிட்டு, மதிப்புச் சரிவைத் தடுக்க வேண்டியநிலையில் உள்ளனர்.
இந்தியச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை எடுத்து வருவதும், நடப்புக்கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வருவதும் காரணமாகும்.
அந்நிய செலாவணி பரிமாற்றச் சந்தையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு எதிராக இந்தியா ரூபாய் மதிப்பு ரூ.79.04 என்ற அளவில் இருந்தது. வர்த்தகத்தின் இடையே ரூ.79.02 எனஉயர்வாகவும், ரூ.79.38 எனவும் சரிந்தது. இறுதியாக வர்த்தகம் முடிவில் நேற்றை மதிப்பைவிட, 41 பைசா குறைந்து, ரூ.79.36 காசுகளாகக் குறைந்தது. திங்கள்கிழமை சந்தை முடிவில் டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ரூ.78.95ஆக இருந்தது.
டாலருக்கு எதிராக இதுவரை இந்த அளவு இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது இல்லை. முதல் முறையாக ரூ.79.36ஆகக் குறைந்துள்ளது.
இதுகுறித்து பின்பிபரிவாஸ் நிறுவனத்தின் சந்தை ஆய்வாளர் அனுஜ் சவுத்ரி கூறுகையில் “ டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்று வீழ்ச்சி அடைந்துள்ளது. டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது, உள்நாட்டு புள்ளிவிவரங்கள் இந்திய ரூபாய் மதிப்புசரிவை வலுவாக்கிவிட்டன.
இந்தியாவின் ஜூன் மாத ஏற்றுமதி 16.78 சதவீதம் கடந்த ஆண்டைவிட உயர்ந்து, 379.40 கோடி டாலராக அதிகரி்த்துள்ளது. ஆனால், வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து, 25.63 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. தங்கம் இறக்குமதி, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அதிகமாக டாலர் செலவிட்டதால், வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்ததோடு, ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது.
சர்வதேச அளவில் சூழல் இன்னும் இயல்புக்கு வராதது, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றால், ரூபாய் மதிப்புச் சரிவுக்கு வாய்ப்புள்ளது
அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும்போது,டாலரின் மதிப்பு மேலும் வலுவடையும். அப்போது இந்திய ரூபாய் மதிப்புக்கு கடும் நெருக்கடியாக ரூ.80வரை சரியும். நடப்புக்கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்க தங்கம் இறக்குமதிக்கான வரியை அரசு உயர்த்தினாலும், தங்கத்தின் தேவை குறையவில்லை. சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 112.25 டாலராக இருக்கிறது” எனத் தெரிவித்தார்