rupee vs dollar: forex reserves: ஆர்பிஐ தலையிட்டும் சரியும் அந்நியச் செலாவணி கையிருப்பு: என்ன காரணம்
டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்புச் சரிவைத் தடுக்கும் பொருட்டு ரிசர்வ் வங்கி தலையிட்டும், அந்நியச் செலாவணி கையிருப்பு மளமளவெனச் சரிந்து வருகிறது.
டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்புச் சரிவைத் தடுக்கும் பொருட்டு ரிசர்வ் வங்கி தலையிட்டும், அந்நியச் செலாவணி கையிருப்பு மளமளவெனச் சரிந்து வருகிறது.
ஜூலை 1ம் தேதி நிலவரப்படி அந்நியச் செலாவணி கையிருப்பு 5883.10 கோடி டாலராகக் குறைந்துள்ளது. ஏறக்குறைய ஒரு வாரத்தில் மட்டும் 500 கோடி குறைந்திருக்கிறது.
வெளிநாட்டு கரன்ஸி சொத்து 450 கோடி டாலர் குறைந்ததே அந்நியச் செலாவணி கையிருப்பு சரிந்ததற்கு முக்கியக் காரணமாகும். அந்நியச் செலாவணிச் சந்தையில் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதைத் தடுக்கும் பொருட்டு, ரிசர்வ் வங்கி டாலர்களை விற்பனை செய்தும் ரூபாய் மதிப்பு சரிவைத் தடுக்க முடியவில்லை.
ஜூலை மாதம் தொடக்கத்திலிருந்து இந்திய ரூபாயின் மதிப்பு0.9 சதவீதம் சரிந்து, டாலருக்கு எதிராக இதுவரை இல்லாத அளவு 79 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துத. 2022ம் ஆண்டில் மட்டும் 6.2 சதவீதம் ரூாபய் மதிப்புக் குறைந்துள்ளது. இதில் எப்போதும் இல்லாத வகையில் கடந்த 5ம் தேதி டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ரூ.79.36 பைசாவாகச் சரிந்தது.
பிப்ரவரி மாதம், ரஷ்யா உக்ரைன் இடையே போர் தொடங்கியதிலிருந்து, வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் கரன்ஸிகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்பப் பெற்று, பாதுகாப்பாக டாலரில் முதலீடு செய்து வருகிறார்கள்.
கடந்த பிப்ரவரி 25ம் தேதி நிலவரப்படி ரிசர்வ் வங்கியிடம் 6315.30 கோடி டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பு இருந்தது. ஆனால், டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு சரிவைத் தடுக்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி தன்னிடம் இருக்கும் டாலர்களைச் சந்தையில் தொடர்ந்து விற்பனை செய்தது.
இதனால் 500 கோடி டாலர் அந்நியச் செலாவணி குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கியிடம் உச்ச கட்டமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி 6420 கோடி டாலர் கையிருப்பு இருந்து படிப்படியாகக் குறையத் தொடங்கியது.
ரிசர்வ் வங்கியிடம் தற்போது கையிருப்பு இருக்கும் அந்நியச் செலாவணி மதிப்பு அடுத்த 10 மாதங்கள் இறக்குமதிக்கு போதுமானதாக இருக்கும். ஜூன் மாதத்தில் மட்டும் அந்நிய முதலீட்டாளர்கள் 302.90 கோடிக்கு முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்.