சுந்தர் பிச்சையைத் தொடர்ந்து யூடியூப்பின் சிஇஓவாகும் இந்திய வம்சாவளி அமெரிக்கர்; யார் இந்த நீல் மோகன்?
இந்திய அமெரிக்கரான நீல் மோகன் ஆல்பாபெட் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப்பின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கிறார். யூடியூப்பின் வீடியோ பகிர்வு தளத்தின் தலைவராக இருந்த சூசன் வோஜ்சிக்கி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து, இந்த தகவலும் வெளியாகியுள்ளது.
யூடியூப் நிர்வாகியாக நீண்ட காலமாக பொறுப்பு வகித்து வரும் நீல் மோகன் இந்திய அமெரிக்கர் ஆவார். கூகுளுக்கு சொந்தமான யூடியூப் வீடியோ பகிர்வு தளத்தின் தலைவராக பொறுப்பேற்கிறார். இதன் மூலம், கூகுள் நிறுவனமான ஆல்பாபெட்டின் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்டின் சத்யா நாதெல்லா, ஐபிஎம்மின் அரவிந்த் கிருஷ்ணா மற்றும் அடோப்பின் சாந்தனு நாராயண் ஆகியோர் வரிசையில் நீல் மோகனும் இணைகிறார். இவர்கள் அனைவரும் இந்திய வம்சாவழிகள் ஆவர்.
உலகின் மிகப்பெரிய வீடியோ தளமாகவும், அனைவராலும் பார்க்கப்படும் தளமாகவும் யூடியூப்பின் வீடியோ தளம் இருக்கிறது. இதன் தலைவராக இருந்த சூசனிடம் இருந்து பொறுப்பை நீல் மோகன் பெறுகிறார். 54 வயதான சூசன் தனது வலைப்பதிவு இடுகையில் தனது குடும்பம், உடல்நலம் மற்றும் ஆர்வமுள்ள தனிப்பட்ட செயல்களில் ஈடுபட இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சூசன் வோஜ்சிக்கி 2014-ல் யூடியூப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு கூகுள் விளம்பர தயாரிப்புகளுக்கான நிர்வாக துணைத் தலைவராக பணியாற்றி வந்தார். இனி வீடியோ தளத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி பொறுப்பை நீல் மோகன் ஏற்பார் என்று சூசன் தெரிவித்துள்ளார்.
இந்திய - அமெரிக்கரான நீல் மோகன் முன்னதாக யூடியூப்பின் தலைமை தயாரிப்பு அதிகாரியாக பணியாற்றினார். நீல் மோகன் 2008ல் யூடியூப்பை கட்டுப்படுத்தும் கூகுளில் பணிபுரியத் தொடங்கினார். மோகனும், சூசனும் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஒன்றாக பணியாற்றி வந்துள்ளனர். 2007ல் கூகுள் DoubleClick விலைக்கு வாங்கியது. இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த நீல் மோகன் இறுதியில் காட்சி மற்றும் வீடியோ விளம்பரங்களின் மூத்த துணைத் தலைவர் பதவியைப் பெற்றார். அவர் 2015 இல் யூடியூப்பின் தலைமை தயாரிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
கல்வி:
அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தனது மின் பொறியியல் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், 2005 ஆம் ஆண்டில், ஸ்டான்போர்ட் யுனிவர்சிட்டி கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ பெற்றார். யூடியூப் சிஇஓ என்ற பொறுப்புடன் கூடுதலாக ஆடை மற்றும் வடிவமைப்பு வணிகமான ஸ்டிட்ச் ஃபிக்ஸ் போர்டு உறுப்பினராகவும் இருக்கிறார். மேலும், இவர் 23அண்ட்மீ என்ற மரபணு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
ஃபர்ஸ்ட்போஸ்ட் தெரிவித்து இருக்கும் தகவலில், நீல் மோகன் டுவிட்டரில் பணிக்கு சேர இருந்ததாகவும், அதைத் தடுக்க அவருக்கு கூகுள் நிறுவனம் $100 மில்லியன் ஊக்கத்தொகை கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
Ray Dalio: உலக நாடுகளில் அதிக வளர்ச்சியை அடையப்போவது இந்தியாதான் - ரே டாலியோ கருத்து
யூடியூப் தளம் உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா தொர்ருக்குப் பின்னர் இதன் யூசர்ஸ் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஓடிடி தளங்களான நெட்பிள்க்ஸ், அமேசான், டிஷ்னி ப்ளஸ், சோனி லைவ், ஹாட் ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களில் தற்போது பெரிய அளவில் திரைப்படங்கள் அனைத்து மொழிகளிலும் வெளியாகி வருகின்றன. முன்பு இதற்கு எதிர்ப்பு கிளம்பினாலும் தற்போது மக்களிடையே மட்டுமின்றி திரைத்துரையினரிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது. பெரிய நட்சத்திரங்களும் தங்களது படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு போட்டியாக கூகுளும் களம் என்று கூறப்படுகிறது.