நடப்பு நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பரில் வரும் 3-வது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 2-வது காலாண்டு வளர்ச்சியைவிட குறைவாக இருக்கும் என்று எஸ்பிஐ வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நடப்பு நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பரில் வரும் 3-வது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 2-வது காலாண்டு வளர்ச்சியைவிட குறைவாக இருக்கும் என்று எஸ்பிஐ வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நடப்பு நிதியாண்டு(2021-22) 2-வது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.4% இருந்தது. ஆனால், முதல் காலாண்டைவிட, -2வது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி வேகம் 20% குறைவாகத்தான் இருந்தது.

இந்த சூழலில், நாட்டின் நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டு வளர்ச்சி விகிதத்தை தேசிய புள்ளியியல் அலுவலகம் வரும் 28ம் தேதி வெளியிடுகிறது. ஆனால், அதற்குள் எஸ்பிஐ வங்கியின் பொருளாதார ஆய்வாளர்கள் கணித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் “ எஸ்பிஐ வங்கியின் நவ்கேஸ்டிங் மாடலின்படி, நடப்பு நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் 3-வது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.8% வரை இருக்கும். இது 2வது காலாண்டைவிட குறைவு. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி திருத்தப்பட்டதில் முதலில் 9.3 % வளர்ச்சிஇருக்கும் என மதிப்பிட்டோம் இப்போது 8.8% வரை மட்டுமே இருக்கும் எனக் கணித்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் ஜிடிபி மதிப்பு ரூ.145.69 லட்சம் கோடியாக இருந்தநிலையில் நடப்பு நிதியாண்டில் ரூ.2.35 லட்சம் கோடிக்கும் மேலாக அதிகரிக்கலாம். 

உள்நாட்டில் பொருளாதார நடவடிக்கை எதிர்பார்த்த அளவு இன்னும் விரிவடையவில்லை. தனியார் நுகர்வும், கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் இருந்ததுபோன்று இல்லை. 

கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டிலிருந்து கிராமப்புறங்களில் டிராக்டர், இரு சக்கர விற்பனை தொடர்ந்துசரிந்து கொண்டேதான் இருக்கிறது. ஒமைக்ரான் வைரஸ் பரவலால் உள்நாட்டு விமானப் போக்குவரத்தும் பெரிதாக வளரவில்லை, சுறுசுறுப்படையவில்லை. புதிய முதலீடுகளும் பெரிதாக இல்லை, ஏற்றுமதியும் சுறுசுறுப்பாக நடக்கவில்லை. 

கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளும் வகையில் ரூ.50ஆயிரம் வரை கடன் கொடுக்க அரசு திட்டம் வகுக்க வேண்டும். கடனை வெற்றிகரமாக அடைக்கும் மக்களுக்கு ஊக்கச் சலுகையும், வட்டிச் சலுகையும் அறிவிக்க வேண்டும், தொடர்கடன் சலுகையையும் அறிவிக்க வேண்டும். இந்த கடனுக்கான 3சதவீத வட்டி சுமையை அரசு சுமந்து கொண்டால், இந்தகடன் தொகை சந்தையில் நுகர்வுக்கு மிகப்பெரிய உந்துதசக்தி அளித்து சந்தையில் நுகர்வுச் சக்கரத்தை வேகமாக சுழல வைக்கும்.

இந்த கடன்கள் வழங்கப்படும்போது, வங்கிநிர்வாகம் முழுமையான தகவல்திரட்டை உருவாக்கி, இறுதிநிலை கடன்பெறுவோர் குறித்த கடன்தகவல்திரட்டை உருவாக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளது