இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருக்கும் சீனாவைச்சேர்ந்த 54 செயலிகளுக்கு(ஆப்ஸ்) தடைவிதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருக்கும் சீனாவைச்சேர்ந்த 54 செயலிகளுக்கு(ஆப்ஸ்) தடைவிதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்தச் செயலிகள் அனைத்தும் இந்திய தேசத்தின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நாட்டின் பொது ஒழுங்குக்கும் குந்தகம் விளைவிப்பதாக இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளதாக்கில் இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவம் தாக்கல் நடத்தியதில் 20 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின் சீனாவுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த 2020, ஜூன் மாதம் 59 சீன செயலிகளுக்கு தடைவிதித்தது.
அதன்பின் 2020 செப்டம்பர் மாதம் 118 செயலிகளுக்கு தடைவிதித்தது, அதன்பின் நவம்பர் மாதம் மேலும் டிக்டாக், வீசாட், ஹெலோ ஆப்ஸ் உள்ளிட்ட 49 செயலிகளுக்கு நிரந்தரமாக தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது. இதில் அலிபாபா குழுமத்தின் 4 செயலிகளும் தடை செய்யப்பட்டன.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மேலும் 54 செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதில், “ பியூட்டி கேமிரா, ஸ்வீட் செல்பி ஹெச்டி, பியூட்டி கேமிரா, செல்பி கேமிரா, இக்வலைசர் பேஸ் பூஸ்டர், கேம்கார்டு, ஐஸோலாந்து-2, ஆஷஸ் ஆஃப் டைம் லைட், விவா வீடியோ எடிட்டர், டென்சென்ட் எக்ஸ்ரிவர், ஓம்யோஜி செஸ், ஓம்யோஜி ஏரினா, ஆப் லாக், டூவல் ஸ்பேஸ் லைட் உள்ளிட்ட பல செயலிகள் தடை செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69 A-வின் கீழ் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தத் தடையைப் பிறப்பிக்கலாம் எனத் தெரிகிறது.
