உலக அளவில், கார் உற்பத்தியில் பொறுத்தவரையில், 5வது இடத்தை பிடித்துள்ளது இந்தியா.

தொழிலாளர் ஸ்டிரைக் போன்ற காரணங்களால் உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தென்கொரியா பின்தங்கி விட்டதால், சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகன உற்பத்தி குறைந்துள்ளது. இந்திய மதிப்பில் இந்த இழப்பு 13 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, நடப்பு ஆண்டில் இந்தியா இதுவரை சுமார் 25.7 லட்சம் கார்களுக்கு மேல் உற்பத்தி செய்துள்ளதுள்ளதால், தென்கொரியாவை இந்தியா முந்தி, 5வது இடத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை பொறுத்தவரை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்பு 7 சதவீதமாக உள்ளது.கார் உற்பத்தியில் முதல் 5 இடங்களில் ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா, சீனா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.