india cryptocurrency கிரிப்டோகரன்ஸி மற்றும் டிஜிட்டல் சொத்துக்கள் வைத்திருப்பவர்களை ஒழுங்குமுறைக்குள் கொண்டுவருதற்கு உலகளவில் கருத்தொற்றுமை ஏற்பட்டபின்புதான் மத்திய அரசு சட்டம் இயற்றும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
கிரிப்டோகரன்ஸி மற்றும் டிஜிட்டல் சொத்துக்கள் வைத்திருப்பவர்களை ஒழுங்குமுறைக்குள் கொண்டுவருதற்கு உலகளவில் கருத்தொற்றுமை ஏற்பட்டபின்புதான் மத்திய அரசு சட்டம் இயற்றும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
30%வரி
கிரிப்டோகரன்ஸி மற்றும் டிஜிட்டல் சொத்துக்கள் பரிமாற்றத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 30 சதவீதம் வரிவிதிக்கும் நடைமுறை இன்று முதல்(ஏப்ரல்1ம்தேதி) நடைமுறைக்கு வருகிறது.

ஆனால், கிரிப்டோகரன்ஸியை ஒழுங்குபடுத்த, நெறிப்படுத்த சட்டம் ஏதும் மத்திய அரசு இயற்றவில்லை. இதற்காக வரைவுப் பணிகளில் மத்திய நிதிஅமைச்சகம் அறிவுறுத்தலின் பெயரில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
ஆனால், கிரிப்டோகரன்ஸியை நெறிப்படுத்தும் வகையில், இறுக்கிப்பிடிக்கும் வகையில் இப்போதைக்கு மத்திய அ ரசு சட்டம் ஏதும் இயற்ற வாய்ப்பில்லை, அதற்கான திட்டமும் அரசிடம் இல்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டம் வருமா
கிரிப்டோகரன்ஸி பரிவர்த்தனைக்கு 30 சதவீதம் வரிவிதிக்கும் முன், அதை நெறிப்படுத்த சட்டம் கொண்டுவரப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால், கிரிப்டோகரன்ஸி உலகளவில் பரந்து விரிந்திருப்தால், அதைக் கட்டுப்படுத்த வேண்டும், அல்லது நெறிப்படுத்த உலகளவில் ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம். ஒரு தேசம் மட்டும் கிரிப்டோகரன்ஸியை கட்டுப்படுத்த சட்டம் இயற்றுவது சாத்தியமில்லை.

உலக கருத்தொற்றுமை
இதுகுறித்து கடந்த ஜனவரி மாதம் உலகப் பொருளாதார மாநாட்டில் பேசிய பிரதமர் மோடியும், இதே கருத்தைத்தான் தெரிவித்திருந்தார். அதாவது கிரிப்டோகரன்ஸியை ஒழுங்குமுறைப்படுத்த ஒருதேசத்தால் முடியாது. அதற்கு உலகளாவிய அணுகுமுறை, ஒத்துழைப்பு அவசியம் எனத் தெரிவித்திருந்தார்.
ஆதலால், உலகளவில் கிரிப்டோகரன்ஸியை நெறிப்படுத்த கருத்தொற்றுமையுடன் கூடிய விதிகள் வகுக்கப்பட்டபின்புதான் இந்தியாவில் கிரிப்டோகரன்ஸியை நெறிப்படுத்த சட்டம் இயற்றப்படும் எனத் தெரிகிறது
வாய்ப்பில்லை
அதுவரை கிரிப்டோகரன்ஸியை ஒழுங்குபடுத்த தனியாக சட்டம் ஏதும் மத்தியஅரசு இயற்ற வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
இந்தியாவில் கிரிப்டோகரன்ஸிக்கான சந்தை அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. 2020ம் ஆண்டு ஜூலையிலிருந்து 2021 ஜூன் வரை கிரிப்டோகரன்ஸிக்கான இந்தியச் சந்தை641% வளர்ந்திருக்கிறது என்று செயின்அனாலிசிஸ் ஆய்வு தெரிவிக்கிறது.

ஆதலால், கிரிப்டோகரன்ஸி வைத்திருப்பவர்கள், வர்த்தகம் செய்பவர்கள், பரிமாற்றம் செய்பவர்கள் 30 சதவீதம் வரிமட்டும் செலுத்தினால் மட்டும் போதுமானது. கிரிப்டோவைக் கட்டுப்படுத்த இப்போதைக்கு சட்டம் வர வாய்ப்பில்லை.
