india australia trade deal: இந்தியா, ஆஸ்திரேலியா இடையே கையொழுத்தான பொருளாதாரக் கூட்டுறவு வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்
இந்தியா, ஆஸ்திரேலியா இடையே கையொழுத்தான பொருளாதாரக் கூட்டுறவு வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்
வர்த்தக ஒப்பந்தம்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், இன்று கையொப்பமானது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலும், ஆஸ்திரேலிய வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீ்ட்டுத்துறை அமைச்சர் டான் தேஹனும் காணொலி மூலம் இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதாரக் கூட்டுறவுமற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிஸன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.

இந்த ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பேட்டியில் கூறியதாவது:
10 லட்சம் வேலைவாய்ப்பு
இந்தியாவுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க நாள். கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக மிகப்பெரிய ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று நம்புகிறேன்.சேவைதுறையிலிரும் இருநாடுகளும் பரஸ்பரத்துடன் செயல்படுவார்கள்.
யோகா பயிற்றுநர்கள்
இந்தியாவில் உள்ள சமையல்கலைஞர்கள், யோகா பயிற்றுநர்கள் ஆகியோருக்கு வரும் காலங்களில் ஆஸ்திரேலியாவில் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆஸ்திரேலியாவில் பயிலும் இந்திய மாணவர்கள் படித்து முடித்தபின் 2 முதல் 4 ஆண்டுகள்வரை அங்கு வேலைபார்க்கவும் வசதி இருக்கிறது. குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத்துறையில் அதிக வேலைவாய்ப்பிருக்கிறது.
ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள், அவர்கள் தங்களின் அனுபவங்களையும், சுற்றுலாதுறையை ஊக்கப்படுத்த அனுபவங்களைப் பகிர்வார்கள்.

5ஆயிரம் கோடி டாலர்
அடுத்த 5 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 4500 கோடி டாலரிலிருந்து 5ஆயிரம் கோடி டாலராக அதிகரிக்கும். இந்த ஒப்பந்தத்தின் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 96.4சதவீத பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கிறது. தற்போது 4 முதல் 5 சதவீதம் சுங்கவரி விதிக்கப்படுவது ரத்து செய்யப்படும். ஆஸ்திரேலியா. குறிப்பாக ஜவுளிகள், தோல்பொருட்கள், தங்க நகைகள், விளையாட்டு சாதனங்கள், எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.
ஏற்றுமதி அதிகரிக்கும்
வர்த்தகரீதியான தடைகள் களையப்பட்டுவிட்டதால், தொழிலாளர் சார்ந்த துறைகளான ஜவுளித்துறை, மருந்துத்துறை, தோல்பொருட்கள் செய்தல், பொறியியல் சாதனங்கள், ஆட்டோமொபைல் ஆகியவற்றில் அதிகமான வேலைவாய்ப்பு இந்தியர்களுக்கு கிடைக்கும்.

இந்தியாவுக்கு 135துணைபிரிவு துறைகளில் சலுகை வழங்கியுள்ளது, இந்தியா 103 துணைப்பிரிவு துறைகளில் சலுகையை ஆஸ்திரேலிலயாவுக்கு வழங்கியுள்ளது.கல்வி, தகவல்தொழில்நுட்பம், வர்த்தகம், தொழில்முறைச் சேவை, சுகாதாரம், ஆடியோ-விஷூவல் ஆகியவற்றில் இந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்
