income tax :2022-23ம் நிதியாண்டு இன்று முதல்(ஏப்ரல்1ம்தேதி) தொடங்கும் நிலையில் வருமானவரி செலுத்துவோர், புதிய மாற்றங்கள் குறித்து தெரிந்துகொண்டால் இந்த ஆண்டை சிரமமின்றி கடந்து செல்ல முடியும்
2022-23ம் நிதியாண்டு இன்று முதல்(ஏப்ரல்1ம்தேதி) தொடங்கும் நிலையில் வருமானவரி செலுத்துவோர், புதிய மாற்றங்கள் குறித்து தெரிந்துகொண்டால் இந்த ஆண்டை சிரமமின்றி கடந்து செல்ல முடியும்
1. 2021-22ம் ஆண்டுக்கான தாமத வருமானவரிரிட்டன் தாக்கல் செய்யும் கடைசித் தேதி மார்ச்31,2022(நேற்று) முடிந்துவிட்டது. இந்த கெடுவை தவறவிட்ட வரி செலுத்துவோர்கள் அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய வட்டி, அல்லதுசில நேரங்களில் சிறை தண்டனையைக் கூட அனுபவிக்கலாம்.

2. ஆதார்-பான் கார்டை இணைக்கும் கடைசிநாளும் நேற்றுடன்(மார்ச்31-2022) முடிந்துவிட்டது. இனிமேல் இணைக்க வேண்டுமென்றால் ரூ.500 அபராதத்துடன் இணைக்கலாம். 3 மாதங்களுக்குப்பின் இணைத்தால் ரூ.1000 அபராதமாகச் செலுத்த வேண்டும். அபராதம் செலுத்தினால் பான் கார்டு செயல்பாட்டில் இருக்கும், இல்லாவிட்டால் முடக்கப்படும்.
3. கிரிப்டோகரன்ஸி அல்லது டிஜிட்டல் சொத்துக்களை பரிமாற்றம் செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டினால் 30 சதவீதம் வரி விதிக்கப்படும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஒரு சதவீதம் டிடிஎஸ் நடைமுறை ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

4. தனிநபர் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யும்போது, தவறுகள் ஏதேனும் இருந்தால், அந்தந்த நிதியாண்டிலிருந்து 2 ஆண்டுக்குள் அபராதத்துடன் திருத்திக்கொள்ளலாம்.
5. அனைத்து விதமான முதலீட்டு ஆதாயத்தின் மீதும் 15% கூடுதல்வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த நடைமுறை முதலில் பங்குகள் மற்றும் பரஸ்பரநிதிக்கு மட்டுமே இருந்தது.

6. ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு அதிகமாக பிஎப் பணம் செலுத்தும் தனிநபர்களுக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும்.
7. நிதிச்சட்டம் பிரிவு80இஇஏ பிரிவின்படி, வீட்டுக்கடன் பெற்றவர்களுக்கு கூடுதலாக வட்டி செலுத்துவதில் ரூ1.50லட்சம் தள்ளுபடி அமலுக்கு வருகிறது.
8. 2021-2022ம் ஆண்டு நிதியாண்டில் யாரெல்லாம் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யாமல் இருப்பவர்களுக்கும் டிடிஎஸ், டிசிஎஸ் பொருந்தும்.
