“INCOME TAX “ பிடித்தம் எவ்வளவு? அமலுக்கு வருகிறது எஸ்எம்எஸ் சேவை ....!!!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

வருமானவரித்துறையினர் பிடித்தம் செய்யும், பணத்தின் விவரத்தை ‘‘மாத சம்பளக்காரர்கள், தங்களுக்கு பிடித்தம் செய்த டிடிஎஸ் விவரத்தை இனி எஸ்எம்எஸ் மூலம் பெறலாம் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இதில், பிடித்தம் குறித்த ஏதாவது சந்தேகம் இருந்தால், நிறுவனத்தில் வழங்கும் சம்பள சிலிப்புடன் எஸ்எம்எஸ் விவரத்தை ஒப்பிட்டு பார்த்து தெளிவு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. . 

 இந்த எஸ்எம்எஸ் வசதியை மத்திய நேரடி வரிகள் ஆணையம், விரைவில் செயல்படுத்த இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தால், தற்போது 2.5 கோடி சம்பளதாரர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில், சம்பளம் அல்லாத வியாபாராம் செய்பவர்கள் , 4.4 கோடி பேரும் இதனால், பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.