income tax return :வருமானவரி ரிட்டன் செலுத்தும் அளவை மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது. இதன்படி நிதியாண்டில் ரூ.25 ஆயிரத்துக்கு அதிகமாக டிடிஎஸ்அல்லது டிசிஎஸ் பெறுவோர் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்.
வருமானவரி ரிட்டன் செலுத்தும் அளவை மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது. இதன்படி நிதியாண்டில் ரூ.25 ஆயிரத்துக்கு அதிகமாக டிடிஎஸ்அல்லது டிசிஎஸ் பெறுவோர் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்தபுதிய விதிமுறை கடந்த 21ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒருநபர் வரி செலுத்தும் வருமான அளவுக்கு கீழ் வருமானம் ஈட்டுபவராக இருந்தாலும் அவரும் ரிட்டன் தாக்கல் செ்யய வேண்டும்.

ரூ.25ஆயிரம் டிடிஎஸ்
இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் “ வருமானவரிச் சட்டம் பிரிவு 139(1)ன்கீழ் 7-வது விதியின்கீழ் புதிய விதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்குவருமானவரிச் சட்டம் 9-வது திருத்தவிதியாகும்.
இந்த புதிய விதி அரசாணையி்ல் வெளியிடுவதிலிருந்து அமலாகும். புதிய விதி ஏப்ரல் 21ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. வருமானவரி ரிட்டன் செலுத்தாமல் இருப்போரின் செலவுகள், வருமானம் ஆகியவற்றை கண்டறிய இந்த புதிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமானவரி நிர்வாகம் சிறப்பாகும்.
இதன்படி நிதியாண்டில் ரூ.25 ஆயிரம் அதற்கு மேல் டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் பெறுவோர் கண்டிப்பாக வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள் ரூ.50ஆயிரத்துக்கு மேல் பெற்றால் அவர்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.
ரூ.50 லட்சம்
அதுமட்டுமல்லாமல் ஒரு நபர் நிதியாண்டில் தனது சேமிப்புக் கணக்கில் ரூ.50 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தாலும்இந்த விதியின் கீழ் வருவார். வர்த்தகம் செய்வோர் ஆண்டுக்கு ரூ.60 லட்சத்துக்கு மேல் விற்றுமுதல் இருந்தாலும் அவர்களும் ரிட்டன் செலுத்த வேண்டும், தொழிற்முறை ரிசிப்ட் ரூ.10 லட்சத்துக்கு இருந்தாலும் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்.

பலசரக்கு கடை
அதுமட்டுமல்லாமல் சிறு தொழில் செய்வோர், சுயதொழில் செய்வோர், அதாவது சிறிய பலசரக்கு கடை வைத்திருப்போர், ஓரளவு பெரிதான பலசரக்கு கடை, சூப்பர் மார்க்கெட் வைத்திருப்போர் ஆண்டுக்கு ரூ.60 லட்சம் விற்றுமுதல் இருந்தாலும், அவர்களும் ரிட்டன் தாக்கல் செய்யவது கட்டாயம்” எனத் தெரிவித்துள்ளது.
இதன்படி பெரிதாக செலவு செய்வோர், வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யாமல் தப்பித்துக் கொள்வது கடினமாகும்.

கடந்த 2019ம் ஆண்டு முதல் நடப்புக் கணக்கில் ரூ.ஒரு கோடி அல்லது அதற்கு அதிகமாக டெபாசிட் செய்பவர்கள், வெளிநாடுகளில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக செலவிடுவோர், ரூ.ஒருலட்சத்துக்கும் அதிகமாக மின்கட்டணம் செலுத்துவோரும் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என்று கொண்டுவரப்பட்டது. நடப்பு வருமானவரிச் சட்டத்தின்படி, தனிநபர் ஒருவரின் வருமானம், முதலீடு, செலவு ஆகியவை வருமானவரித்துறையின் வரையரைக்குள் வந்தால் அவர்கள் ரிட்டன் தாக்கல் செய்வது அவசியமாகும்.
