பொதுமக்களோடு நல்லுறவை வளர்க்கும் விதமாக, பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்து செய்திகளை பொதுமக்களுக்கு அனுப்ப வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அதாவது, . வரி செலுத்துபவர் களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் விதமாக அவர்களது முக்கிய விசேஷ தினங்களுக்கு வாழ்த்து செய்திகள் அனுப்ப முடிவு செய்துள்ளது.
தற்போது, ஆண்டு வருமான வரி குறித்த தகவல்களை குறுஞ்செய்தியாக வரி செலுத்துபவர்களுக்கு தற்போது அனுப்பி வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
.வரி செலுத்துபவர்களை . அவர்களை ஊக்கப் படுத்தும் விதமான நட வடிக்கைகளை வருமான வரித் துறை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆன்லைன் மூலம் வருமான வரி செலுத்து பவர்களிடம் அவர்களது திருமண நாள் குறித்த தகவல்களும் கேட்கப்பட்டு , வாழ்த்துக்களை தெரிவிக்க திட்டமிட்டுள்ளது, வருமான வரித்துறை.
