இந்தியாவில் தரம் குறைந்த பொருட்களா? சிக்கிய யூனிலிவர், கோகோ கோலா, பெப்சி நிறுவனங்கள்
வளரும் நாடுகளான இந்தியா போன்றவற்றில், தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்வதாக அறிக்கை கூறுகிறது.
உலகின் மிகப்பெரிய உணவு மற்றும் பான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளில் தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்வதாக அறிக்கை கூறுகிறது. ஆக்ஸஸ் டு நியூட்ரிஷன் இனிஷியேட்டிவ் (ATNi) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நெஸ்லே, பெப்சி, யூனிலிவர் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளில் இந்த பாகுபாடு காணப்படுகிறது.
உணவு மற்றும் பான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் ஆரோக்கியத் தரத்தை மதிப்பிடும் ஹெல்த் ஸ்டார் மதிப்பீடு (HSR) முறையைப் பயன்படுத்துகின்றன. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் பயன்படுத்தப்படும் இந்த முறையில், 0 முதல் 5 வரையிலான நட்சத்திரங்கள் வழங்கப்படுகின்றன. ஐந்து நட்சத்திரங்கள் மிகவும் ஆரோக்கியமான உணவை குறிக்கிறது. 3.5 நட்சத்திரங்களுக்கு மேல் உள்ள தயாரிப்புகளும் நல்ல தரம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளின் சராசரி மதிப்பீடு வெறும் 1.8 நட்சத்திரங்கள் மட்டுமே. ஆனால், வளர்ந்த நாடுகளில் விற்கப்படும் தயாரிப்புகளுக்கு சராசரியாக 2.3 நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் பொருள், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்வதாக அறிக்கை கூறுகிறது.
யூனிலிவர், கோகோ கோலா, மொண்டலீஸ், பெப்சி போன்ற நிறுவனங்களுக்கு இந்தியாவில் பெரிய சந்தை உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, யூனிலிவருக்கு இரண்டாவது பெரிய சந்தை இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.1000 முதலீட்டில் கோடீஸ்வரர் ஆகலாம்: 1 கோடி பெற எத்தனை ஆண்டுகள் ஆகும்?