நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலை சமீபகாலமாக உச்சத்தை தொட்ட நிலையில், சாதாரண மக்களுக்கு நகை வாங்குவது சிரமமாக உள்ளது. வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் உயரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். 

In Chennai today  gold prices remain unchanged KAK

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 10 வருடங்களில் சகசரவென அதிகரித்த தங்கத்தின் விலையானது தற்போது உச்சவிலையை தொட்டுள்ளது. ஒரு சவரன் 10 ஆயிரம் ரூபாய் முதல் 15000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலையானது அடுத்த சில ஆண்டுகளிலேயே 60,000 என்ற இமாலய உச்சத்தை தொட்டது. தங்கத்தின் விலை உயர்வால் சாதாரண மக்களால் நகைகளை வாங்க முடியாமல் நகைக்கடையின் வாசலில்  வேடிக்கை பார்க்கும் நிலை தான் உள்ளது. அதே நேரம்  உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் தங்கத்தை வாங்கி குவித்தும் வருகிறார்கள்.


குறிப்பாக தங்கத்தின் விலையானது தற்போது 60,000 என்ற விலையை தொட இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ஒரு சவரன் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் என்ற புதிய உச்சத்தை தொடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகிறார்கள். எனவே வரும் காலங்களில் தங்கத்தை யார் அதிகமாக வைத்துள்ளார்களோ அவர்களே கோடீஸ்வரர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தான் தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

In Chennai today  gold prices remain unchanged KAK

 மற்ற நாடுகளை விட இந்திய மக்கள் தான் தங்கத்தின் மீதான அதிக ஆர்வத்தில் உள்ளார்கள். தங்கத்தின் விலை வரும் நாட்களில் உயரக்கூடும் என தகவல் வெளியாகி வரும் நிலையில் தற்போது நகைகளை வாங்கும் நிலையும் அதிகரித்து காணப்படுகிறது.

திருமண நிகழ்வு, விசேஷ காலங்களில் மக்கள் அதிக அளவு தங்கத்தில் வாங்கி வருகிறார்கள். அந்த வகையில் வரும் நாட்கள் விசேஷ நாட்கள் என்பதால் தங்கம் விற்பனை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவசர தேவைக்கு தங்கம் ஒரு அட்ஷய பாத்திரமாக இருப்பதால் மக்களும் அதிக அளவில் தங்கத்தை வாங்கி வைத்திருக்கிறார்கள். மருத்துவம், கல்வி போன்ற அவசர தேவைகளுக்காக உடனடியாக நகையை விற்கவோ, அடகு வைத்து பணம் பெற முடியும் என்ற காரணத்தின் காரணமாக தங்கத்தை சேமிப்பு பொருளாகவே மக்கள் பார்த்து வருகிறார்கள்.

In Chennai today  gold prices remain unchanged KAK

இந்த நிலையில் தங்கத்தின் விலையானது கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பெரிய அளவில் குறைந்தது. இரண்டு தினங்களில் சவரனுக்கு அதிரடியாக 1160 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை தங்க வர்த்தகம் விடுமுறை காரணமாக விலையில் மாற்றம் இல்லை. இன்றும் தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் தங்கம் ரூ.7140க்கும், சவரன் ரூ.57,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios