ICICI Bank HDFC match SBI cut home loan rates by up to 30 basis points

பாரத ஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து, இரு தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. , எச்.டி.எப்.சி. வங்கிகள் ரூ.30 லட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கான வட்டியை 0.3 சதவீதம் குறைத்துள்ளன.

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் 2022ம் ஆண்டுக்குள் சொந்த வீடு கிடைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக அனைவரின் வீட்டுக்கனவை நிறைவேற்றும் வகையில் ரூ.30 லட்சத்துக்கான கடனுக்கான வட்டியை குறைக்க அரசு வங்கிகளுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து, மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி கடந்த வாரம் 25 புள்ளிகள் வட்டியை குறைத்தது.

இப்போது ஐ.சி.ஐ.சி.ஐ. , எச்.டி.எப்.சி. வங்கிகளும் வட்டியை குறைத்துள்ளன. இது குறித்து எச்.டி.எப்.சி. ெவளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

புதிதாக வீட்டுக்கடன் ரூ.30 லட்சம் வரை பெறும் பெண்களுக்கு வட்டி 8.35 சதவீதமாகவும், மற்றவர்களுக்கு 8.40 சதவீதம் வட்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், ரூ. 30 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை கடன் பெறும் பெறும் வாடிக்கையாளர்ளுக்கான வட்டி 8.50 சதவீதம் என்பதில் மாற்றமில்லை. ரூ.75 லட்சத்துக்கு அதிகமாக கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி 8.75 சதவீதத்தில் இருந்து 8.55 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி முறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வௌியிட்ட அறிவிப்பில் “ நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக் கனவை நினவாக்கும் வகையில், ரூ.30 லட்சம் வரை வீட்டுக்கடன் பெறுபவர்களுக்கு வட்டி 0.3 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. 

வேலைக்குச் செல்லும் பெண்கள் ரூ.30 லட்சம் வரை வீட்டுக்கடன் பெற்றால், அவர்களுக்கு வட்டி 8.35 சதவீதமும், மற்றவர்களுக்கு 8.40 சதவீதமும் வட்டி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.