hydrogen car : அடுத்த 6 மாதத்தில் ஹைட்ரஜன் எரிபொருளில் கார் இயக்கப்படும் என்று சமீபத்தில் தெரிவித்த மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, தான் சொன்னதைச் செய்துவிட்டார்.
அடுத்த 6 மாதத்தில் ஹைட்ரஜன் எரிபொருளில் கார் இயக்கப்படும் என்று சமீபத்தில் தெரிவித்த மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, தான் சொன்னதைச் செய்துவிட்டார்.
நாட்டிலேயே முதல்முறையாக ஹைடர்ஜன் எரிபொருளில் இயங்கக்கூடிய காரில் இன்று நாடாளுமன்றத்துக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வந்தார்.
விலை உயர்வு
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது நடுத்தர, சாமானிய மக்களுக்கு பெரிய வலியாக இருந்து வருகிறது. இந்தியா கச்சா எண்ணெய் தேவையில் 84 சதவீதம் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்த வேண்டியுள்ளது.
பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருள் கொண்டுவர வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு சுலுகையும், ஊக்கமும் அளி்த்து வருகிறது. அதேநேரம், பெட்ரோல், டீசலுக்கு பதிலாக எத்தனால், மெத்தனால், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வாகனங்களையும் தயாரிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது, அதற்கு ஊக்கமும் அளித்து வருகிறது.
6 மாதத்தில்
மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் ஒரு ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், “ஆட்டமொபைல் நிறுவன அதிபர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது, அனைத்து இந்திய ஆட்டமொபைல் தாயாரிப்பாளர்கள் பிரதிநிதிகளும் வந்திருந்தார்கள். அவர்களிடம் பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் மாற்று எரிபொருளில் இயங்கும் வகையில்வாகனங்களைத் தயாரிக்க கேட்டேன்.
அதற்கு, அடுத்த 6 மாதத்துக்குள் பிளெக்ஸி-பியூவல் எஞ்சின் அதாவது பெட்ரோல்,டீசல் மட்டும்லலாது, எத்தனால்,மெத்தனால், சிஎன்சி,ஹைட்ரஜனி்ல் இயக்ககூடிய வாகனங்களை தயாரித்து தருவதாக உறுதியளித்துள்ளனர்.பிளெக்ஸி பியூல் வாகனங்களை தாயாரிக்கும் முயற்சியில் டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவர்கள் முதலில் இரு சக்கர, 3 சக்கர வாகனங்களை தயாரிக்கும் முயற்சியில் உள்ளனர்.
அரிசி, மக்காச்சோளம், கரும்பு ஆகியவற்றிலிருந்தும் பயோ-எத்தனாலோ விவசாயிகள் தயாரிக்கிறார்கள். நாட்டில் விரைவில் வாகனங்கள் அனைத்தும் 100 சதவீத எத்தனாலில் இயங்கும். பிளெக்ஸி பியூல் எஞ்சின்களை வாகன உற்பத்தியாளர்கள் வெளியிட வேண்டும் என கடந்த ஆண்டு கேட்டுக்கொண்டேன். பசுமை ஹைடர்ஜனில் இயக்கப்படும் வாகனங்களுக்கும்அரசு முன்னுரிமை அளிக்கும். அதையும் அரசுஊக்கப்படுத்தி வருகிறது” எனத் தெரிவித்தார்.
சொன்னதை செய்தார்
நிதின் கட்கரி தான் கூறியதுபோலவே ஹைட்ரஜனில் இயங்கும் காரில் நாடாளுமன்றத்துக்கு இன்று வந்தார். ஹைட்ரஜன்அடிப்படையில் பியூஸ்செல்எலெக்ட்ரிக் வாகனத்தில் வந்து அதன் பயன்களையும் எடுத்துக்கூறினார்.
ரூ.3 ஆயிரம் கோடி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நிருபர்களிடம் பேசுகையில் “ இந்த ஹைட்ரஜன் வாகனதுக்கு மிராய் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதாவது எதிர்காலம் எனப் பெயர். இந்தியா விரைவில் பசுமை ஹைட்ரஜனை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறும். சுற்றுச்சூழல் மாசைக் குறைக்க பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்துள்ளார். இதற்காக தேசிய ஹைட்ரஜன் இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி, பசுமை எரிவாயுவை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்தத் திட்டத்துக்காக ரூ.3ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் இந்தியாவில் தயாரிக்கப்படும்,
தற்கான எரிபொருள் நிலையங்களும் உருவாக்கப்பட்டு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். நீரிலிருந்து எடுக்கப்படும் பசுமை ஹைட்ரஜன் ஆத்மநிர்பார் திட்டத்தின் முக்கிய அம்சம். இந்த கார் பரிசோதனை முயற்சிதான். பசுமை ஹைட்ரஜன் நாட்டில் உற்பத்தி செய்யத் தொடங்கியபின், ஏற்றுமதி தடை செய்யப்படும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் “ எனத் தெரிவித்தார்
