ஆதார் கார்டு, பான் கார்டை இணைக்கும் காலக்கெடு வரும் 31-ம் தேதியுடன் முடிகிறது. இந்த தேதிக்குள் இணைக்காவிட்டால் பான் கார்டு எண் ரத்தாகும் வருமானவரி செலுத்துவோராக இருந்து இணைக்காமல் இருந்தால், ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் 

ஆதார் கார்டு, பான் கார்டை இணைக்கும் காலக்கெடு வரும் 31-ம் தேதியுடன் முடிகிறது. இந்த தேதிக்குள் இணைக்காவிட்டால் பான் கார்டு எண் ரத்தாகும் வருமானவரி செலுத்துவோராக இருந்து இணைக்காமல் இருந்தால், ரூ.10ஆயிரம் அபராதம் செலுத்தப்படும்.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது.

குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது.

இதன் பிறகு பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது பான் எண்-ஐ ஆதார் எண்ணுடன் இணைக்கவேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. 

கொரோனா தொற்று வந்ததையடுத்து, ஆதார்-பான்கார்டு இணைப்புக்கு பலமுறை கால அவகாசத்தை நீட்டிப்பு செய்த மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி முடிவடைய இருந்தது. அதை 2022, மார்ச் 31ம் தேதிவரை நீட்டித்து. இந்த மாதம் 31ம் தேதியுடன் அதற்கான காலக்கெடுவும் முடிகிறது.

இந்த குறி்ப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆதார்-பான் கார்டை இணைக்காவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் வருமானவரி செலுத்துவோராகஇருந்து இணைக்காமல்இருந்தால் ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும், பரஸ்பரநிதி,பங்கு வர்த்தகம், என எதையும் புதிதாகத் தொடங்க முடியாது.

பான்-ஆதார் கார்டு எப்படி இணைப்பது

வருமான வரித்துறையின் இணையதளத்துக்குச் சென்று பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள ஆதார் எண், பான் எண், ஆதார் பெயர் ஆகியவற்றை குறிப்பிடவும்.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பான் கார்டு எண், ஆதார் எண் மற்றும் அதில்உள்ள சரியான பெயரை கொடுக்கவேண்டும்.
வருமான வரித்துறை வழங்கி உள்ள அறிவுரையின்படி, யுஐடிஏஐ சோதனை செய்தபின்னர், இணைப்பு உறுதிசெய்யப்படும்.
எஸ்.எம்.எஸ். மூலமாகவும் இணைக்கலாம்

ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கு எஸ்எஸ்எம் வசதியையும் உள்ளது. அதன்படி செல்போனில் UIDPAN என்று டைப் செய்து இடைவெளிவிட்டு உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும்.அதன் பின் சிறிய இடைவெளிவிட்டு உங்கள் பான் எண்ணை குறிப்பிட்டு இதனை 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பி இணைத்து கொள்ளலாம்.