குழந்தைகளுக்கான முதலீடு: எதிர்கால தேவையைப் பூர்த்தி செய்ய எந்தத் திட்டத்தைத் தேர்வு செய்யலாம்?

இரண்டு மகள்களுக்கு 15 வருட முதலீட்டு காலத்திற்கு தலா ரூ. 10,000 முதலீட்டு செய்ய என்ன வாய்ப்புகள் உள்ளன? அவர்கள் பெயரில் SIP திட்டத்தை விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

How to invest for your child's future sgb

பிள்ளைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதே பல பெற்றோருக்கு முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது குழந்தைகள் வளரும்போது அவர்களுக்கு நிதி பாதுகாப்பை உறுதிசெய்ய உதவும்.

இரண்டு மகள்களுக்கு 15 வருட முதலீட்டு காலத்திற்கு தலா ரூ. 10,000 முதலீட்டு செய்ய என்ன வாய்ப்புகள் உள்ளன? அவர்கள் பெயரில் SIP திட்டத்தை விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

நீண்ட கால செல்வத்தை உருவாக்குவதற்கு, 70-100% ஈக்விட்டி கொண்ட முதலீடுகளைத் தேர்ந்தெடுக்க வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள். பல வகைகளில் உள்ள ஈக்விட்டி போர்ட்ஃபோலியோகளில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

சம்பளமே இல்லாமல் வேலை செய்யும் அம்பானி! செலவுகளை எப்படி நிர்வகிக்கிறார் தெரியுமா?

குழந்தைகளுக்கான நிதியில் முதலீடு செய்யும்போது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அல்லது குழந்தை மேஜர் ஆகும் வரையில் எது முந்தையதோ அதுவரை லாக்-இன் காலம் இருக்கும். 5 வருட லாக்-இன் காலம் இருப்பதால், குறைவான செயல்திறன் அல்லது ஃபண்டில் ஏதேனும் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட்டால் அதிலிருந்து வெளியேறும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.

செலவு விகிதமும் அதிகமாக இருக்கும். முதலீட்டாளர்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக நிரூபிக்கப்பட்ட நீண்ட கால சாதனையுடன் பன்முகம் கொண்ட ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது.

நீண்ட கால முதலீட்டை எவ்வாறு அணுகுவது குறித்த ஆலோசனை கூறும் நிபுணர்கள் சரியான மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்ந்தெடுப்பது, போர்ட்ஃபோலியோவில் வகைப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆகியவை பற்றி கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.

நிதி இலக்குகள் திறம்பட பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்யும் அதே வேளையில் வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சிறப்பான பலனைக் கொடுக்கும்.

பெண்களுக்கு மட்டும் இந்த சூப்பர் திட்டம்! வெறும் 1000 டெபாசிட் செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios