கூகுளில் ஈசியா ரூ.1 லட்சம் சம்பாதிக்கலாம்; எப்படின்னு பார்க்கலாம் வாங்க!!

கூகுளில் மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கலாம். வெறும் 600 ரூபாய் முதலீட்டில் கூகுள் ஆட்சென்ஸ் மூலம் வருமானம் ஈட்டலாம்.

how to earn money in google by writing articles and blogs

கூகுள் பயன்பாடு பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். தெரியாதவையும் இருக்கத்தான் செய்கின்றன. கூகுள் ப்ளே, கூகுள் தேடல் ஆகியவை பற்றி தெரியும். ஆனால் கூகுளில் மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

கூகுள் பே ஆப் மட்டுமின்றி உங்களது கட்டுரைகளை கூகுளில் வெளியிட்டு வீட்டில் இருந்தபடியே லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம். அதாவது, இதை கூகுள் இணையதளம் பற்றி கூறுகிறோம். உங்களுக்கு எழுதுவது பிடிக்கும் என்றால், ஆர்வமாக இருந்தால், இந்த வேலையைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கலாம். உங்களுக்கு தேவையானது வெறும் ரூ. 600 முதலீடுதான். 

கூகுளில் கட்டுரைகளை வெளியிடுவதைத்தான் கூறுகிறோம். கூகுளின் விதிகளைப் பின்பற்றி தினமும் உங்கள் இணையதளத்தில் கட்டுரைகளை எழுத வேண்டும். மேலும் உங்கள் கட்டுரைகள் கூகுள் தேடலில் ட்ரெண்ட் செய்தால், Google Adsense கணக்கை உருவாக்குவதற்கான அனுமதி உங்களுக்கு கிடைக்கும். கூகுள் ஆட்சென்ஸ் கணக்கின் அனுமதியைப் பெற்றவுடன், உங்கள் இணையதளத்தில் விளம்பரங்கள் வரும். அப்புறம் என்ன நீங்கள் எழுதிய கட்டுரை அல்லது ப்ளாக் மூலம் எளிதாக லட்சக்கணக்கான ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். 

கூகுள் மூலம் கட்டுரை எப்படி ஆரம்பிப்பது என்று பார்க்கலாம். Google தேடலைப் பயன்படுத்தி உங்கள் கட்டுரைகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதையும் கூறுகிறோம். 

Google இணையத்தை உருவாக்கி கட்டுரை அல்லது ப்ளாக் தினமும் எழுதுங்கள். கூகுள் என்பது நம் மொபைலின் முக்கிய அங்கம். தொழில்நுட்பத்தில் கூகுள் தான் முதலிடத்தில் உள்ளது. இது ஒரு ஆன்லைன் நிறுவனம். கூகுள் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பினால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்  இணையதளம் ஒன்றை உருவாக்குவதுதான். 

Google இணையத்தை உருவாக்குவதன் மூலம் முழுநேர அல்லது பகுதி நேரம் எழுதத் தொடங்கலாம். எழுவதற்கு உங்களுக்கு ஒரு இணையதளம் வேண்டும். கூகுள் இணையதளம் உருவாக்குவதற்கு உங்களை அனுமதிக்கிறது. மேலும், இணையதளத்தை உருவாக்குவதற்கான படிப்படியான வழிமுறையையும் விளக்குகிறது. கூகுளைப் பயன்படுத்தி உங்கள் சொந்த இணையதளத்தை உருவாக்கலாம்.

600 ரூபாய் முதலீடு, ஒவ்வொரு மாதமும் 1 லட்சம் ரூபாய் லாபம்: 

Google வேலையைத் தொடங்குவதற்கு முன் நீங்கள் ரூ. 600 மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். ரூ. 600 முதலீட்டில் டொமைன் பெயர், ஹோஸ்டிங் வாங்கலாம். Google இலிருந்து டொமைன் பெயரை வாங்கி ஹோஸ்டிங் செய்த பிறகு இணையதளத்தை உருவாக்கலாம். ​​உங்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை இணையதளத்தில் பதியலாம். கூகுளின் இலவச கருவியையும் பயன்படுத்தலாம். கூகுளின் இலவச டூல் ப்ளாக்கரைப் பயன்படுத்தி, இலவசமாக ஒரு டொமைன் பெயரை வாங்கி உருவாக்கலாம்.

இருப்பினும், இது ஹோஸ்டிங் இல்லாத டொமைன் பெயரை மட்டுமே வழங்கும். இதற்குப் பிறகு, டொமைனை வாங்கி ஹோஸ்டிங் செய்த பிறகு, வேர்ட்பிரஸில் ஒரு வலைத்தளத்தை உருவாக்கும் பணி மிக விரைவாக செய்யப்படும்.  இதனால் நீங்கள் கூடிய விரைவில் பணம் சம்பாதிக்கலாம்.

இணையதளம் தயாரான பிறகு, இந்த இணையதளத்தில் தேவைக்கேற்ப அல்லது வசதிக்கேற்ப தினசரி புதிய தகவல்கள், செய்திகள், அரசுத் திட்டம், வேலை, அனுமதி அட்டை, பயணங்கள், சுகாதார வலைப்பதிவுகள் போன்றவற்றை எழுதலாம். தொழில்நுட்பம் தொடர்பான முக்கியமான கட்டுரைகளை எழுதி வெளியிடுங்கள். உங்கள் கட்டுரை வர்த்தக செய்திகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உங்கள் கட்டுரையை எஸ்சிஓ (SEO) மூலம் மேம்படுத்தினால், இணையதளத்தில் சிறந்த ரிசல்ட் கிடைக்கும். இதன் காரணமாக உங்கள் இணையதளத்தில் அதிகமான விளம்பரங்கள் வரும். நீங்கள் எழுதும் சுவராஸ்யமான கட்டுரைகள், தகவல்களைப் பொருத்து உங்களுக்கு என்று தனியாக யூசர்கள் உருவாகிவிடுவார்கள். அதிமானோர் உங்களது தளத்திற்கு படிப்பதற்காக வருவார்கள். அதிகமான வியூவ்ஸ் பெறுவதால், உங்கள் கட்டுரைகளும் தரவரிசைப்படுத்தத் தொடங்குகின்றன. மேலும் உங்கள் கணக்கை Google Adsense கணக்காக மாற்றலாம்.

கூகுள் ஆட்சென்ஸ் கணக்கிற்கு அனுமதி பெற, உங்கள் இணையதளத்தின் பெயரை உள்ளிட்டு, கூகுள் ஆட்சென்ஸில் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் வீட்டில் அமர்ந்து உங்களது எழுத்து திறமையை வெளிப்படுத்தி லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம்.

இந்த வழியில், வீட்டிலேயே அமர்ந்து எழுதும் பொழுதுபோக்கை நிறைவேற்றும் போது, ​​நீங்களும் எளிதாக மாதத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (ரூ.100000) வரை சம்பாதிக்கலாம். மேலும் தகவல் வேண்டுமானால் கூகுள் ஆட்சென்ஸ் சென்று பார்க்கலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios