மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை எப்படி கணக்கீடு செய்வது என்பது பற்றி காணலாம்

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போதையை அகவிலைப்படி உயர்வானது அக்டோபர் மாதம் ஊதியத்தில் வழங்கப்படும் எனவும், இந்த உயர்வு ஜூலை 1, 2023 முதல் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எனவே, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையாக மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும். நிலுவைத் தொகையானது, அறிவிக்கப்பட்ட சதவீத உயர்வின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். உதாரணமாக 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதால், மூன்று மாதத்திற்கு 4 சதவீதம் நிலுவைத் தொகை வழங்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 7ஆவது ஊதியக்குழுவின் கீழ், நிலை 1 முதல் நிலை 18 வரை வெவ்வேறு தர ஊதியமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், அகவிலைப்படியானது தர ஊதியம் மற்றும் பயணப்படியின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. நிலை 1 இல், குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 - ரூ.56900. நிலை 2 முதல் 14 வரையிலான ஊழியர்களுக்கு சம்பளம் தர ஊதியத்தின் படி மாறுபடும். நிலை 15, 17, 18க்கு தர ஊதியம் இல்லை. மாறாக, அடிப்படை சம்பளம் முறையே, ரூ.182,200, ரூ.2,25,000, ரூ.2,50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நிலை 1 இல் உள்ள ஊழியர்களின் தர ஊதியம் ரூ 1800 ஆகும். இதில் அடிப்படை ஊதியம் ரூ.18000. இது தவிர, பயணக் கொடுப்பனவும் (TA) சேர்க்கப்பட்டுள்ளது. லெவல்-1 கிரேடு பே-1800ல் மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000.

Today Gold Rate in Chennai : தொடர்ந்து ஜெட் வேகத்தில் அதிகரித்த தங்கம்.. இன்று உயர்ந்ததா? குறைந்ததா?

எனவே, உயர்த்தப்பட்ட அளவின்படி, குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்திற்கு கணக்கிட்டால், ஆதாவதி; அகவிலைப்படை + பயணக் கொடுப்பனவு 46 சதவீதம் (ரூ.10251), அகவிலைப்படை + பயணக் கொடுப்பனவு 42 சதவீதம் (ரூ.9477) என ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கு கணக்கிட வேண்டும். அப்படி கணக்கிட்டால், மாதம் ஒன்றுக்கு ரூ.774 வரும். மூன்று மாதங்களுக்கு நிலுவைத் தொகையாக ரூ.2322ஐ நிலை 1 இல் உள்ள ஊழியர்கள் பெறுவார்கள்.

அதேபோல், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் கணக்கீட்டில் வரும் நிலை 18இல் உள்ள மத்திய ஊழியர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.10288 நிலுவைத் தொகையாக மூன்று மாதங்களுக்கு ரூ.30864 பெறுவார்கள்.