விசா இல்லாமல் இந்தியாவில் நுழைந்தது எப்படி? அனுபவத்தை பகிர்ந்த உபெர் சிஇஒ.....!!!
விசா இல்லாமலே இந்தியாவிற்கு வந்துள்ளார் உபெர் நிறுவனத்தின் CEO டிராவிஸ் கலாநிக் . உபெர் பிரபல நிறுவனம் என்றாலும், கால் டாக்ஸியில் தற்போது அனைவரும் மிக சுலபமாக பயன்படுத்தும் ஒன்றாகவே தற்போது உபெர் உள்ளது என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.
இந்நிறுவனத்தின் சிஇஒ டிராவிஸ் கலாநிக், கடந்த ஜனவரி மாதம், ஸ்டார்ட்அப் இந்தியா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியா வந்தபோது அவருடைய அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்.
அதாவது, கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி காலை இந்தியாவுக்கு வந்துள்ளார். ஆனால் அவருடைய விசாவில் குளறுபடி இருந்துள்ளது. பின்னர், நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த்தான் உதவியதன் அடிப்படையில் தான் அவர் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது, இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள டிராவிஸ் கலாநிக், நேற்று முன்தினம் மரியாதை நிமித்தமாக குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து , அவர் கடந்த டிசம்பர் மாதம் இந்தியா வரும் போது, சந்தித்த அனுபவத்தை , குடியரசுத்தலைவர் பிரணாப்புடன் பகிர்ந்து கொண்டார்.
மேலும் சச்சின் டெண்டுல்கரையும் சந்தித்தது, தனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என குறிபிட்டுள்ளார்.
