யாருக்கு தான் வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்காது.. ஜான் இடமாக இருந்தாலும் சொந்த இடமாக இருக்க வேண்டும் என தான்   யாருமே நினைப்பார்கள்.. சரி வீடு வாங்குவது என்ன அந்த அளவிற்கு சுலபமா என்ன..? ஒரே நேரத்தில் லட்சங்களில் பணத்தை எப்படி புரட்ட முடியும்.. முடியாது அல்லவா..? அதாவது நடுத்தர மக்களுக்கு கண்டிப்பாக முடியாது தான்.. இதற்கெல்லாம் இருக்கும் ஒரே வழி வங்கியில் லோன் பெறுவது தான் அல்லவா..? 

இவ்வாறு பெறப்படும் லோன் மூலம் நாம் நினைக்கும் வீட்டை வாங்கி மாதம் மாதம் தவணை முறையில் சில குறிப்பிட்ட தொகையை இஎம்ஐ யாக செலுத்துவோம். இவ்வாறு செலுத்தப்படும் மாத தவணை குறைந்தது பத்து ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக முப்பது ஆண்டுகள் வரை நீட்டித்து, வாடிக்கையாளர்களின்  விருப்பத்திற்கு ஏற்ப மாத தவணை தொகையை நிர்ணயிக்கின்றனர்.

இந்த இடைப்பட்ட ஆண்டுகளில், லோன் பெற்றவருக்கு எதாவது நேர்ந்தாலோ அல்லது மாத தவணை கட்ட முடியவில்லை என்றால் கடன் மறு சீரமைப்பு மூலம், கடனை கட்ட கால அவகாசம் கொடுப்பது அல்லது வேறு எதாவது மாற்று முறைக்கு வழி வகுக்கிறது.

இது போன்ற சமயத்தில், நாம் வாங்கும் சொத்துக்கு நம் குழந்தைகள் மீது  சுமை கொடுக்காமல் இருக்க நாம் செய்ய வேண்டியது காப்பீடு எடுத்துக் கொள்வது...அதுவும் நாம் வங்கியில் பெற்றுக்கொண்டுள்ள பணத்தை விட அதிகமான தொகையில் வீடுகளுக்கான டெர்ம் காப்பீடு எடுத்துக்கொள்ளலாம்.இதன் மூலம் உயிரிப்பு அல்லது பணத்தை கட்ட முடியாத சூழ்நிலை வரும் போது, இந்த காப்பீடு நமக்கு பேருதவி செய்யும்.

அதற்காகத்தான் வீட்டு கடன் தவணைகளை செலுத்தும்போது வரக்கூடிய எதிர்பாராத சங்கடங்களை சமாளிக்க காப்பீடு அவசியம் என்ற நிலையில் வீட்டு கடன் அளிக்கும் நிறுவனங்கள் கடன் பெற்றவர்களுக்கு உதவும் விதமாக ‘பில்ட் இன்’ காப்பீடு திட்டங்களை அளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நாம் லோன் வாங்கி வீடு கட்டும் போது, இது போன்ற காப்பீடு  எடுத்து வைத்து இருந்தால், சமாளிக்க முடியாத சூழலில் நம் வாரிசுகளுக்கு  எந்த பிரச்னையும் இல்லாமல் வீடு கிடைத்து விடும். வீடு வாங்குவதை விட, வீட்டிற்காக நாம் செலுத்தும் காப்பீடு மிக முக்கியம் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.