வீட்டு கடனுக்கான வட்டி விகிதம்  அதிரடி  குறைப்பு... !!!

வீடு  வாங்கும் அனைவரும்,  லோன்  வாங்குவது இயல்பு. அவ்வாறு  வாங்கும் லோன்  பணத்திற்கு  வங்கிகள்  சற்று   அதிக  வட்டியில்  தான்  லோன்  கொடுத்து  வந்தது.

இந்நிலையில் தற்போது, அதில்   சில  மாற்றத்தை  கொண்டு வந்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் ஐசிஐசிஐ  வங்கிகள்.

தற்போது இந்த இரண்டு வங்கிகளும் ,வீட்டு கடனுக்கான வட்டி விகிதம்  குறைத்துள்ளது.

அதாவது, எஸ்பிஐ-யில் 0.15 சதவீதமும் ஐசிஐசிஐ-யில் 0.10 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக் கப்பட்டுள்ளது.

வட்டிக் குறைப்பு காரணமாக எஸ்பிஐ-யில் வீட்டுக் கடன் விகிதம் 8.90 சதவீதமாகவும், ஐசிஐசிஐ வங்கியில் 8.95 சதவீத மாகவும் குறைந்துள்ளது. வட்டிக் குறைப்பு நவம்பர்  1, அதாவது  இன்று முதல்  அமலுக்கு  வருகிறது.