hdfc interest rate :ஹெச்டிஎப்சி வங்கி வீட்டுக் கடன்களுக்கான வட்டியை 30 பிபிஎஸ் உயர்த்தியுள்ளது. இந்த வட்டிவீத உயர்வு வரும் 9ம் தேதி முதல் அமலாகும் என வங்கி தெரிவித்துள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கி வீட்டுக் கடன்களுக்கான வட்டியை 30 பிபிஎஸ் உயர்த்தியுள்ளது. இந்த வட்டிவீத உயர்வு வரும் 9ம் தேதி முதல் அமலாகும் என வங்கி தெரிவித்துள்ளது.

ரெப்போ ரேட் வீதம்

ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன் ரெப்போ ரேட் வீதத்தை 40 புள்ளிகள் உயர்த்தியது. அதைத் தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பந்தன் வங்கி உள்ளிட்ட வங்கிகள் வட்டிவீதத்தை உயர்த்தின. இப்போது, ஹெச்டிஎப்சி வங்கியும் வட்டியை உயர்த்தியுள்ளது.

இதன்படி, ஹெச்டிஎப்சி வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி 6.7 சதவீதமாக முன்பு இருந்தது. இனிமேல் 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கி வெளியிட்ட அறிவிப்பில் “ ஹெச்டிஎப்சி வீட்டுக்கடனுக்கான சில்லரைக்கடனுக்கான வட்டியை 30 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. 6.7 சதவீதமாக இருந்த வட்டிவீதம் 7 சதவீதமாக வசூலிக்கப்படும். இந்த புதிய வட்டிவீத உயர்வு மே 9ம் தேதி முதல் அமலாகும்” எனத் தெரிவித்துள்ளது. 

கூடுதலாக 5 பிபிஎஸ்

இதற்கிடையே கடந்த வாரம்தான் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கான வட்டியை 5 புள்ளிகள்வரை ஹெச்டிஎப்சி வங்கி உயர்த்தியது. இதனால் வீ்ட்டுக்கடன் வாங்கியவர்கள் கூடுதலாக 35 புள்ளிகள் வட்டியுடன் செலுத்த வேண்டும்

ரூ.30 லட்சம்வரை கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வட்டிவீதம் 7.10 சதவீதமாகவும், ரூ30 லட்சம் முதல் ரூ75 லட்சம் வரை பெறுவோருக்கு வட்டி 7.35 சதவீதமாகவும், ரூ75 லட்சத்துக்கு மேல் கடன் பெறுவோருக்கு வட்டி ரூ.7.45 சதவீதமாகவும் வசூலிக்கப்படும்
முன்னதாக நேற்று முன்தினம் ஐசிஐசிஐ வங்கி கடனுக்கான வட்டியை 40 புள்ளிகள் உயர்த்தி 8.10 சதவீதமாக அதிகரித்தது. பேங்ஆஃப் பரோடா வங்கி 6.90 சதவீதமாகவும் உயர்த்தியது. 

வங்கிகள் வட்டி உயர்வு

இதுதவிர பந்தன்வங்கி, கோடக் மகிந்திராவங்கி, ஜனா சிறு நிதி வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷநல் வங்கிகள் சில்லரை வர்த்தகர்களுக்கு டெபாசிட்களுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன.

2021ம் ஆண்டு டிசம்பர் நிலவரப்படி வங்கிகள் வழங்கிய கடன்களில் 39 சதவீதம் வெளிப்புற பெஞ்ச்மார்க் அடிப்படையிலும், வீட்டுக்கடன்கள் 58.2 சதவீதம் வெளிப்புற பெஞ்ச்மார்க் அடிப்படையிலும் வழங்கப்பட்டுள்ளது ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.