வீடுகள் மீதான  ஜிஎஸ்டி வரி விதிப்பை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

அதன்படி கட்டுமான நிலையிலுள்ள புதிய வீடுகளுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வாங்க தயாராக உள்ள வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரி 8 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகவும், பிற வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசப்பட்டது. இந்த கூட்டத்தில் மேற்குவங்க நிதி அமைச்சர் அமித் மித்ரா உள்ளிட்ட சில மாநில நிதி அமைச்சர்களும் பங்குபெற்று அவர்களது கருத்தை முன்வைத்தனர். 

மேலும் மெட்ரோ அல்லாத நகரங்களில் ரூபாய் 30 லட்சம் வரையிலும், மெட்ரோ உள்ள நகரங்களில் ரூபாய் 45 லட்சம் வரையிலும் 3% ஜிஎஸ்டி 
வரி நிர்ணயம் செய்து, இதைவிட அதிக மதிப்பு கொண்ட வீடுகளுக்கு 5% வரி விதிக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் மேற்கு வங்கத்தை பொறுத்தவரையில் 70 சதவீதம் வீடுகள் 40 லட்சத்துக்கும் குறைவான வீடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவர்கள் மீது மூன்று சதவீத வரி விதிப்பு இருந்தால் அவர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என வாதிடப்பட்டது.

பின்னர் இறுதியாக தற்போது வாங்க தக்க வீடுகள் பிரிவுக்கு ஒரு 1 வரியும்,பிற பிரிவின் கீழ் வரும் பிரிவினருக்கு 5 சதவீத வரியும்   விதித்து முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது நடைமுறையில் இருப்பது என்னவென்றால் "வாங்க தயாராக உள்ள வீடுகளுக்கு 8% வரியும், அதிக மதிப்புள்ள வீடுகளுக்கு 12 சதவீத வரியும் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமல்லாமல், மற்றொ நகரங்களில் கார்பெட் பகுதியுடன் சேர்த்து 60 சதுர மீட்டர் அளவிலான வீடுகள் வணங்கத்தக்க வீடுகளாக கணக்கில் உள்ளது. தற்போது இதற்கு குறைவான பரப்பளவு கொண்ட வீடுகளும் இதே பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளது.புதிய வரி நிரனயம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.