2024இல் இந்தியா, சீனாவின் வளர்ச்சி மிரட்டலாக இருக்கும்! விளக்கமாகக் கூறும் IMF கீதா கோபிநாத்!
2024ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி உலக வளர்ச்சியில் ஏறக்குறைய பாதி அளவுக்கு இருக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் கூறுகிறது.
சர்வதேச செலாவணி நிதியம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை மதிப்பீடுகளை வெளியிட்டு வருகிறது. அந்த அமைப்பு சார்பாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட வளர்ச்சித் திட்ட அறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் கொண்ட இந்தியாவும் சீனாவும் 2024ஆம் ஆண்டின் உலகளாவிய வளர்ச்சியில் பாதிக்கு பங்களிக்கும் என சர்வதேச செலாவணி நிதியத்தின் இந்த அறிக்கை கூறுகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவில் நிலவும் மந்தநிலையையும் சுட்டிக்காட்டியுள்ளது.
நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத், உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட வளர்ச்சித் திட்ட அறிக்கையில், 2024ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி உலக வளர்ச்சியில் ஏறக்குறைய பாதி அளவுக்கு இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். இது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வங்கி சர்வரை ஹேக் செய்து ரூ.16 கோடி அபேஸ்! சைபர் கிரிமினல்கள் கைவரிசை!
அமெரிக்கா மந்தநிலையுடன் ஒப்பிடும்போது ஐரோப்பாவில் வேகமான வளர்ச்சியைக் காணலாம் என கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 2024க்கான உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் (WEO) கணிப்புக்கு ஏற்ப உலகளாவிய வளர்ச்சி இருக்கும் என்றும் சர்வதேச செலாவணி நிதியத்தின் அறிக்கை கூறுகிறது. உலக வளர்ச்சி 2024 இல் 3.2 சதவீதமாகவும், 2025ல் 3.3 சதவீதமாகவும் இருக்கும் என WEO தெரிவித்துள்ளது.
சேவை பணவீக்கம் காரணமாக, விலைகள் குறையவில்லை எனவும் அதனால் பணவியல் கொள்கையை வகுப்பது சிக்கலாகி, பணவீக்க அபாயம் அதிகரித்துள்ளது என அறிக்கை கூறுகிறது. இதன் காரணமாக, அதிகரித்து வரும் வர்த்தகப் பதட்டங்களுடன், கொள்கைகளும் நிச்சயமற்ற தன்மையை நோக்கி நகர்கின்றன. வட்டி விகிதங்கள் முதலியவை நீண்ட காலத்திற்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் அறிக்கை எச்சரித்துள்ளது.
நிலையான விலைவாசியை உறுதி செய்ய கலப்பு கொள்கையை கவனமாக செயல்படுத்த வேண்டும் எனவும் சர்வதேச செவாணி நிதியத்தின் அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.
ஆடம்பரமாக நடந்த அம்பானி திருமணத்துக்கு சிம்பிளாக வந்த தொழிலதிபரின் மனைவி!