மொபைலில் கால் செய்யும்போது கொரோனா வைரஸ் பரவல் குறித்த விழிப்புணர்வு குரல் கடந்த 2 ஆண்டுகளாக ஒலித்த நிலையில் அதை நிறுத்துவது குறித்து மத்திய அரசுஆலோசித்து வருகிறது.
மொபைலில் கால் செய்யும்போது கொரோனா வைரஸ் பரவல் குறித்த விழிப்புணர்வு குரல் கடந்த 2 ஆண்டுகளாக ஒலித்த நிலையில் அதை நிறுத்துவது குறித்து மத்திய அரசுஆலோசித்து வருகிறது.
கொரோனா விழிப்புணர்வு
நாட்டில் கொரோனா பரவல் குறைந்துவிட்டநிலையில் இனிமேலும் கொரோனா தடுப்பூசி, கொரோனா விழிப்புணர்வு குறித்தவாசகங்கள் தேவையில்லை என்று மத்திய தொலைத்தொடர்பு துறை சார்பில் சுகாதாரத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது

கடந்த 2 ஆண்டுகளாக மொபைலில் யாருக்கு அழைப்புச் செய்தாலும், கொரோனா விழிப்புணர்வு குறித்த வாசகம் ஒலித்து முடித்தபின்புதான் இணைப்பு கிடைத்துவந்தது. இதனால் அவசரநேரத்தில் ஒருருக்கு அழைத்தாலும், கொரோனா விழிப்புணர்வு வாசகம் ஒலித்துமுடித்தபின்புதான் இணைப்புகிடைக்கும் நிலை இருந்தது.
கடிதம்
இந்த அசுவுகரியக்குறைவு குறித்து தொலைத்தொடர்பு அமைச்சகம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி, கொரோனா விழிப்புணர்வு குரலை கைவிடக்கோரியுள்ளது. இதையடுத்து, மத்திய அ ரசும் பரிசீலி்க்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
அதுமட்டுமல்லாமல் இந்திய செல்லுலார் ஆப்ரேட்டர்ஸ் அசோசியேஷன், வாடிக்கையாளர்கள் தரப்பிலும் மத்தியஅரசுக்கு இது தொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

மத்தியஅரசு பரிசீலனை
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில் “ நாட்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால், இனியும் கொரோனா விழிப்புணர்வு வாசகம் செல்போனில் தேவையில்லை என்பதால் அதை நீக்கபரிசீலி்க்கப்பட்டு வருகிறது. இந்த வாசகங்களை கைவிடக்கோரி தொலைத்தொடர்பு துறை, செல்போன் நிறுவனங்கள், மக்கள் சார்பில் கோரிக்கைகள் எழுந்ததால் அதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மற்றவகையில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடக்கும்” எனத் தெரிவித்தனர்.

தேவையில்லை
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் சார்பில் மத்திய சுகாதாரத்துறைக்கு எழுதிய கடிதத்தில் “ கடந்த 21மாதங்களாக கொரோனா விழிப்புணர்வு குறித்த குரல் செல்போன் அழைப்பு இணைப்புக்கு முன் ஒலிக்கப்பட்டது. இப்போது கொரோனாபரவல் குறைந்துவிட்டநிலையில் தொடர்ந்து அந்த குரல் ஒலிப்பதில் எந்த பயனும் இல்லை என மக்கள் எண்ணுகிறார்கள்.
அவசர நேரத்தில் யாருக்கேனும் அழைப்புச் செய்தால்கூட இந்த விழிப்புணர்வு குரல் முழுமையாக ஒலித்தபின்புதான் இணைப்புக் கிடைக்கிறது. இதனால் உரிய நேரத்தில் தகவலைப் பரிமாற முடியவில்லை, அலைவரியின்அளவும அதிகரி்க்கிறது. இணைப்பு கிடைப்பதில் தாமதம் நேர்கிறது. ஆதலால் இந்த விழிப்புணர்வு குரல் ஒலிக்கவிடுவதை கைவிட பரிசீலிக்கலாம்”எ னத் தெரிவிக்கப்பட்டுள்ளது
